ஜீ15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் எதிர்வரும் 17ம் திகதி ஜீ15 நாடுகளின் 14 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. தற்போது குறித்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்து வரும் ஈரானிய ஜனாதிபதி முஹமட் அகமட் நிஜாடீன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலின் ஜனாதிபதி லூலா டி சில்வா, வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜீ15 நாடுகள் அமைப்பு 1989ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருவதாகவும், குறித்த அமைப்பில் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 18 நாடுகள் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக