திங்கள், 3 மே, 2010

அமைச்சரும் தனது மனைவி சந்திரவதியும் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

நண்பர் மனைவியை கற்பழித்த கர்நாடக அமைச்சர்! ஹாலப்பாபெங்களூர்: நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்ற கர்நாடக உணவுத்துறை அமைச்சர் ஹாலப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் எதியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகாவைச் சேர்ந்தவர் ஹரதாளு ஹாலப்பா. இவர் கர்நாடக உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.

4 மாதங்களுக்கு முன் ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த ஹாலப்பா தனது நண்பர் வெங்கடேச மூர்த்தியின் வீட்டில் இரவு உணவருந்தச் சென்றார்.

பின்னர், எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. எனவே உங்கள் வீட்டிலேயே தங்குகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாடியில் ஒரு அறையில் ஹாலப்பா தங்க ஏற்பாடு செய்தார்.

நள்ளிரவில் அமைச்சரி்ன் அறையில் இருந்து அலறல் சத்தம்கேட்டு வெங்கடேசமூர்த்தி ஓடினார். அப்போது கை-கால்கள் நடுங்கிய நிலையில் காணப்பட்ட ஹாலப்பா, எனக்கு ரத்த அழுத்தம் குறைந்துட்டது. நீங்கள் உடனடியாக அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு எனது உதவியாளரிடம் உள்ள மாத்திரையை வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றார்.

இதையடுத்து பதறிய நண்பர் நள்ளிரவில் காரை எடுத்துக்கொண்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். ஆனால் அங்கு அமைச்சரின் உதவியாளர் யாரும் இல்லை.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்தார்.

ஆனால், அங்கு அமைச்சரும் தனது மனைவி சந்திரவதியும் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.

சந்திரவதி உடைகள் அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருக்க, அமைச்சர் தனது உடைகளை கலைந்துவிட்டு படுக்கையில் அமர்ந்திருந்தார்.

தன்னை அமைச்சர் ஹாலப்பா கற்பழிக்க முயன்றதாகக் கூறி சந்திரவதி கதறினார்.

அப்போது ஹாலப்பா, நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நடந்தது நடந்து விட்டது. இதுபற்றி வெளியே சொல்ல வேண்டாம். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று காலில் விழுந்துள்ளார்.

பதற்றமான அந்த நிலையில் நடந்த சம்பவத்தை அப்படியே தனது செல்போனில் வீடியோ எடுத்தார் வெங்கடேச மூர்த்தி. பின்னர் ஹாலப்பாவை வீட்டை விட்டு உடனே வெளியேற்றினார் வெங்கடேச மூர்த்தி.

ஆனால், இது குறித்து போலீசில் புகார் கொடுக்க வெங்கடேச மூர்த்தி முயன்றபோது அதை அறிந்து அவருக்கும் மனைவி சந்திரவதிக்கும் ஹாலப்பாவின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

எனது எச்சரிக்கையும் மீறி நடந்ததை வெளியே சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என ஹாலப்பாவே நேரில் இருவரையும் மிரட்டியுள்ளார்.

மிரட்டல் தொடர்ந்து கொண்டிருந்ததால் வெளியே சொல்ல பயந்துள்ளனர் இந்தத் தம்பதி. மேலும் சந்திரவதி இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இந் நிலையில் செல்போனில் எடுத்த வீடியோவை என்னிடம் தர வேண்டும் இல்லாவிட்டால் உன் குழந்தைகள் இருவரையும் உயிருடன் பார்க்கம முடியாது என்று எச்சரித்துள்ளார் ஹாலப்பா.

குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலை உருவானதையடுத்து இது குறித்து கன்னட பத்திரிக்கைக்கு தகவல் தந்தார் வெங்கடேசமூர்த்தி.

இதைத் தொடர்ந்து ஹாலப்பாவின் அக்கிரம வீடியோவையும் கன்னட தொலைக்காட்சிகளிடம் அளித்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் முதல்வர் எதியூரப்பா.

அவரது ராஜினாமாவை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு லீலை அமைச்சர்:

எதியூரப்பாவின் அமைச்சரவையில் உள்ள ரேணுகாச்சார்யா மீதும் இதே போன்ற ஒரு புகாரை நர்ஸ் ஜெயலட்சுமி என்பவர் வெளியிட்டார்.

இருவரும் குஜாலில் ஈடுபட்ட படங்களையும் அந்த நர்சே வெளியிட்டார்.
  Read:  In English 
அப்போது ரேணுகாச்சாரியா வெறும் எம்எல்ஏவாக இருந்தார். இந்த லீலை சமாச்சாரத்தையடுத்து ரேணுக்காச்சாரியாவுக்கு கலால்துறை அமைச்சர் பதவியை தந்தார் எதியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சமீபத்தில் அந்த நர்ஸ், எனக்கும் ரேணுகாச்சாரியாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: