ஞாயிறு, 31 மார்ச், 2019

துரைமுருகன் .. நான் குளிக்கபோயிட்டேன் . சமுகவலையில் ட்ரெண்டிங் ?

நான் குளிக்கப்போய்ட்டேன்.. துரைமுருகன் செம கலாய்.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ட்ரெண்ட் tamil.oneindia.com - veerakumaran துரைமுருகன் வீட்டில் ரெய்டு, தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
சென்னை: வருமான வரி சோதனை நடந்தபோது குளிக்கப்போய்விட்டேன் என்று கலாய் பதில் அளித்துள்ளார், திமுக பொருளாளர் துரைமுருகன்.
தனது இல்லம் மற்றும் கல்லூரிகளில் நடந்த
வருமான வரி சோதனைகள் பற்றி துரைமுருகன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறிய சில தகவல்கள் செம கலாய் ரகம்.
ஓவியா ஆர்மி போல, சமூக வலைத்தளங்களில் 'துரைமுருகன் ஆர்மி' உண்டு. அவர்கள் துரைமுருகனின் டைமிங் பஞ்ச் வசனங்களை எடுத்துப்போட்டு சோஷியல் மீடியாவில் பட்டையை கிளப்புவார்கள். இப்போதும் குளிக்கப்போய்விட்டேன் என்று சொன்ன வார்த்தை வைரலாகிவிட்டது. துரைமுருகன் முழு பேட்டியையும் பாருங்கள்: நான் தேர்தல் பணியில் இருக்கும்போது உங்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள் என்று சொன்னார்கள். நான் வீட்டுக்குப் போனேன், 3 பேர் எங்கள் வீட்டுக்குள் உட்கார்ந்திருந்தார்கள். நீங்கள் யார் என்று கேட்டேன். நாங்கள் வருமான வரித்துறையை சேர்ந்தவர்கள் என்றனர். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன். ஒரு கார்டை காட்டினார். இப்படி ஒரு கார்டை யார் வேண்டுமானாலும் காட்டலாமே, சோதனை நடத்த உங்களிடம் வாரண்ட் உள்ளதா என்று கேட்டேன். அதற்கு தவறாக வந்துவிட்டோம் என கூறி திரும்பிவிட்டனர்.
என் ரூம்லயும் சோதனை பண்ணனும்னு சொன்னாங்க, சரி பண்ணுங்கனு நான் குளிக்க போய்ட்டேன் - #துரைமுருகன் 👉 😂😂😂😂😂😂😂 #thuglife pic.twitter.com/JbWdnADPTO — 💛CSK மஞ்சள் நிலா💛 (@Manjall) March 30, 2019 குளிக்கச் சென்றுவிட்டேன் :  பிறகு சற்று நேரத்தில், நாங்கள் தேர்தல் பறக்கும்படையினர் என்று கூறி மீண்டும் வீட்டுக்கு வந்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று சொல்லாமல் எங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறினேன். பிறகுதான் வருமான வரித்துறை உத்தரவை பெற்று 3 மணிக்கு சோதனையை ஆரம்பித்தனர். என் அறையிலும் சோதனையிட வேண்டும் என்றார்கள். சரி சோதித்துக்கொள்ளுங்கள் என்று நான் குளிக்கச் சென்றுவிட்டேன். வெற்றி வாய்ப்பு !
எங்கள் வீட்டை இந்த நேரத்தில் வருமான வரியோ அல்லது வேறு அதிகாரிகள் சோதனை செய்ய இது காலம் இல்லை. தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளோம். நாங்கள் பெரிய கார்பொரேட் கம்பெனி நடத்தவில்லை. சாதாரண கல்லூரி நடத்தி வருகிறோம். இப்போது எங்கள் வீட்டுக்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன. கதிர் ஆனந்த் வேலூரில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே பயமுறுத்தி பணிய வைக்கலாம் என்று நினைத்து களத்தில் எங்களை எதிர்க்க திராணியற்றுப்போயுள்ள அரசியல்வாதிகள் செய்துள்ள சூழ்ச்சியால், வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல், அதிகாரிகளை கொண்டு எங்களை முதுகில் குத்தப்பாத்துள்ளார்கள். ஆனால், மக்களுக்கு இப்போது யார் என்ன துரோகம் செய்தார்கள் என்பது தெரிந்துவிடும்.

மிரட்டுவது, வழக்கு போடுவதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் திமுகவினர் கிடையாது. நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். பூச்சாண்டிக்கு அஞ்சமாட்டோம்.< மோடி அரசு, வருமான வரித்துறையை ஏவி, ஜனநாயகத்தை கொன்றுவிடலாம், எதிர்க்கட்சிகளை அடக்கிவிடலாம், மோடிக்கு ஜே என சொல்வார்கள் என தப்பு கணக்கு போட்டுள்ளார்கள். இது ஜனநாயக நாடு, இப்படி தப்புக் கணக்கு போட்டவர்கள் எத்தனையோ பேர் அரசியலில் தோற்றுப்போய் உள்ளனர். எனவே இது செல்லரித்துப்போன தத்துவ

கருத்துகள் இல்லை: