ஞாயிறு, 31 மார்ச், 2019

நாடார்களின் பொருளாதார மேலாண்மையை தகர்க்கும் பாஜக மார்வாடிகள்.. குஜராத்தி ...

சரியாக ஒரு வருடம் முன்பு சரவணா ஸ்டோர் வசந்த் அண்ட் கோ மற்றும் பல முக்கிய நாடார் சமூக வணிக நிறுவனங்களை குறி வைத்து சோதனை நடத்தியது பாஜக அரசு. 
நாடார்கள் பொருளாதாரம் குறிவைத்து தாக்கப்பட்டதன் பின்னணி. 
சாந்தி நாராயணன்  :  வளையாத நாடார் சமூகம் , வளையவிட்டால் ஒடித்துப் போடும் முயற்சியில் பாஜக
தி.நகர் வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு காரணமாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதன் பின்னணியில் முன்பு கமலாலயத்தில் வீசிய திராவிடக்காற்றும் காரணம்.
சில நாட்களுக்கு முன் "நானும் திராவிடன் தான் " என்று பொன்னர் எழுப்பிய குரலின் மூலம்.
தொழிலதிபர்களுக்கு, முதலாளிகளுக்கு எதிர்காலத்தில் வணிக வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று பொன்னரும் தமிழிசையும் தந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பல நாடார் சமூகத்தின் பணபலம் படைத்த முக்கியஸ்தர்கள் பாஜகவிற்கு பொருளுதவியும், ஆதரவும் தந்தது.

ஆனால், நடந்ததோ நேர்மாறான நிலை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, அந்நிய முதலீட்டுக்கொள்கைகள் போன்ற பாஜகவின் எல்லா நடவடிக்கைகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது நாடார் சமூகத்தினரே.
பெரும்பாலும் ரொக்க வியாபாரத்தை அடிப்படையாக கொண்ட தங்களது வணிக முறையை பாஜகவின் வர்ணாசிரம பார்வையோடு கூடிய கொள்கைகள் குறிவைத்து தாக்கின என்பதை பொன் .ராதாகிருஷ்ணனிடம் புள்ளிவிவரங்களோடு காட்டி கொந்தளித்துள்ளனர் நாடார் சமூகத்து முக்கியஸ்தர்கள்.

வடமாநிலங்களில் உள்ள முதலாளிகளுக்கே எல்லா வாய்ப்புகளும் பலன்களும் கிடைக்கும் வண்ணம் பாஜக செயல்படுவதை அவர்கள் பொன்னரிடம் கூறி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு அல்லாமல் இனி ஒருமுறை நாடார் சமூகத்தை உங்கள் சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்தாதீர்கள் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்.
தென்னவன் பராக்கிரமன் பராக்கிரமனின் கட்டுரையில் இருந்து.....
கட்டுரையில் குறிப்பிட்டது போல நேரடியாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவித்த நாடார் சமூகத்தின் குரலுக்கான பாஜகவின் பதில் வினை தான் வசந்த் அன் கோ , சரவன்ஸ ஸ்டார் மற்றும் சில நாடார் சமூகத்து வணிக நிறுவனங்களின் மேல் நடக்கும் அரசின் சோதனைகள்.
பாஜக நாடார் சமூகத்தை வளைத்துப் பார்த்தது, முடியாதென்கிற போதில் ஒடித்துப் பார்க்கிறது.
தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று இருந்த சமூகத்தை சீண்டிப் பார்த்திருக்கிறது பாஜக . விளைவு தேர்தலில் தெரியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-நன்றி சாந்தி நாராயணன்

கருத்துகள் இல்லை: