ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஸ்டாலின் அதிரடி : காவிரி தொடர் போராட்டம் ,, ரயில் மறியல் கடை அடைப்பு .கைது செய்தாலும் போராட்டம் தொடரும் . விரிவடையும்

காவிரி பிரச்சினைக்காக தமிழகத்தில் 5-ம் தேதி
முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Cauveruissue #DMK #Allpartymeeting சென்னை: தி.மு.க. சார்பில் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த அனைத்து கட்சி தலைவர்களையும் செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
 இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:< காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுக்கப்படும். மேலும், அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் டெல்டா மாவட்டங்களில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும். மூன்றாம் தேதி நடைபெற்வுள்ள கடையடைப்பு போராட்டத்தை மாற்றும்படி விக்கிரமராஜாவிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: