ஞாயிறு, 4 மார்ச், 2018

மேகாலயாவின் முதல்வர் ஆகிறார் கான்ரட் சங்மா - பாஜகா தில்லுமுல்லு கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா

மேகாலயாவின் முதல்வர் ஆகிறார் கான்ரட் சங்மா - ஆறாம் தேதி கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழாமாலைலமல்ர் :மேகாலயா மாநிலத்தில் அமையும் கூட்டணி ஆட்சியின் முதல் மந்திரியாக கான்ரட் சங்மா வரும் 6-ம் தேதி பதவி ஏற்கிறார். ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதாவுக்கு 2 இடங்கள் கிடைத்தன. பிற சிறிய கட்சிகளுக்கு 14 இடங்கள் கிடைத்தன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இங்கு ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றுவரும் அதேவேளையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேசி கூட்டணி அமைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக காய் நகர்த்தியது.
 இந்நிலையில், இன்று மாலை ஷில்லாங் நகரில் உள்ள ராஜ் பவனுக்கு தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர். கவர்னர் கங்கா பிரசாத்-ஐ சந்தித்த தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ரட் சங்மா, தன்னை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். இதனையடுத்து, கான்ரட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

வரும் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மேகாலயாவின் முதல் மந்திரியாக கான்ரட் சங்மா பதவி ஏற்று கொள்கிறார். அன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கவர்னர் கங்கா பிரசாத் அவருக்கு பதவி பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைக்கிறார்.

புதிய மந்திரிசபையில் துணை முதல் மந்திரியாக யாரும் இருக்க மாட்டார்கள் என இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்த பா.ஜ.க. தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதர மந்திரிகளாகவாவது மற்ற கட்சியினர் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நிச்சயமாக இடம் பெறுவார்கள். ஏனென்றால், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் புதிய அரசு அமைக்கும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

எனவே, இந்த கூட்டணி ஆட்சியிலும் அவர்கள் இடம் பெறுவார்கள்’ என்று குறிப்பிட்டார். #meghalaya #assemblyelection #conrad sangma #tamilnews
ஷில்லாங்:

மேகாலயா மாநிலத்தில் அமையும் கூட்டணி ஆட்சியின் முதல் மந்திரியாக கான்ரட் சங்மா வரும் 6-ம் தேதி பதவி ஏற்கிறார். #meghalaya #assemblyelection #conrad sangma

மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதாவுக்கு 2 இடங்கள் கிடைத்தன. பிற சிறிய கட்சிகளுக்கு 14 இடங்கள் கிடைத்தன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இங்கு ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றுவரும் அதேவேளையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேசி கூட்டணி அமைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக காய் நகர்த்தியது.

இந்நிலையில், இன்று மாலை ஷில்லாங் நகரில் உள்ள ராஜ் பவனுக்கு தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர். 

கவர்னர் கங்கா பிரசாத்-ஐ சந்தித்த தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ரட் சங்மா, தன்னை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். இதனையடுத்து, கான்ரட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

வரும் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மேகாலயாவின் முதல் மந்திரியாக கான்ரட் சங்மா பதவி ஏற்று கொள்கிறார். அன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கவர்னர் கங்கா பிரசாத் அவருக்கு பதவி பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைக்கிறார்.

புதிய மந்திரிசபையில் துணை முதல் மந்திரியாக யாரும் இருக்க மாட்டார்கள் என இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்த பா.ஜ.க. தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதர மந்திரிகளாகவாவது மற்ற கட்சியினர் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நிச்சயமாக இடம் பெறுவார்கள். ஏனென்றால், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் புதிய அரசு அமைக்கும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

எனவே, இந்த கூட்டணி ஆட்சியிலும் அவர்கள் இடம் பெறுவார்கள்’ என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: