ஞாயிறு, 8 ஜனவரி, 2017

விடுதலைப் போராட்ட வீரர்களில் மூன்றில் ஒருவர் முஸ்லிம்.. 30 சதவீதம் முஸ்லிம்கள்

ICHR என்றறியப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட தொகுப்புகளை கடந்த சில ஆண்டுகளாக தயாரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட விவரங்களின் படி 15000 வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 30 சதவீதம் முஸ்லிம்கள். இந்தத் தொகுப்பில் கையெழுத்திட்டு வெளியிடாமல் தாமதம் செய்பவர் ICHR இன் தலைவராக மோடி அரசினால் நியமிக்கப்பட்ட வொய். சுதர்சன ராவ். இவரின் ஆராய்ச்சி முனைப்புகளில் ஒன்று மகாபாரதத்திற்கு தேதி குறிப்பது. வர்ணாசிரம தர்மத்தை ஆதரிப்பவர். விடுதலைப் போராட்டத்தின் வாசனையே இல்லாத சங்க பரிவார அரசு அப்போராட்டத்தில் முஸ்லிம்களின் பெரும் பங்களிப்பை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரித்து விடுமா என்ன?   முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: