விஜய் பாஸ்கர்: ;சக்தி விகடனில் ஏழே வயதான இச்சிறுவன் செய்யும் சிவத்தொண்டு (?) பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள் கழுத்தில் போட்டிருக்கும் நான்கு மாலைகளை தாங்கக் கூடிய வலு அவனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.
அப்பாவும் அம்மாவும் சிவபக்தர்கள். அதனால் பையனையும் அப்படியே வளர்த்துவிட்டார்களாம். சிவனைப் பற்றி கதாகாலட்சேபம் செய்து அதன் மூலம் வரும் பணத்தை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்களாம்.
சிவன் என்றொருவர் இருக்கிறார் அவர் கழுத்தில் பாம்பெல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று சக்தி விகடன் ஆசிரியர் நம்புகிறாரா? சரி அது ஒரு நம்பிக்கை என்று இருந்துவிட்டு போகட்டும்.
அந்தப் பையனுக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதனால் அப்படி இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
இதெல்லாம் கூட பிரச்சனையில்லை. ஆனால் அதை ஏதோ ஒரு சாதனை மாதிரி சக்தி விகடன் கட்டுரை போடுவது சமூக நலனுக்கு எதிரான விஷயமாகும்.
இந்தப் பையனுக்கு கிடைக்கும் இந்த இமேஜை இப்படி பரப்புவது மூலம் அவனுக்கு கிடைக்கப் போகும் மக்கள் (மூடத்தனமான) ஆதரவால் அவன் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்று விகடன் குழுமம் நினைத்துப் பார்த்ததா?
இது மாதிரி ஒரு பையன் நம் வீட்டில் வளர நாம் சம்மதிப்போமோ?
அட்லீஸ்ட் தியானம் யோகம் மனம் ஒஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரி ஆன்மிகத்தையாவது வளந்துவிடுங்கள் சக்தி விகடன் கோஷ்டிகளே.
இது மாதிரி காரியத்தை எப்போதும் செய்யாதீர்கள்.
தமிழர்களிடம் மதுப்பழக்கம் அதிகம் இருக்கிறது என்பதற்காக ”மதுவிகடன்” என்றொரு மதுப்புகழ் பாடும் இதழ் ஆரம்பித்து விட மாட்டீர்கள்தானே…
விஜய் பாஸ்கர், சமூக-அரசியல் விமர்சகர். thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக