மு.வி.நந்தினி
:அடுத்தவர் குடும்பப் பிரச்னையைத் தீர்த்து வைக்க நடிகர்களாகிய
நாம் யார்? என நடிகர் ஸ்ரீபிரியா கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து
தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீபிரியா,
பிரச்னைகளுடன் வாழ்பவர்களுக்கு இது நீதி பெற்றுதரும் இடம் என்றால், அதை கேமரா இல்லாமல் செய்வோம், அவர்களுக்கு வழக்கறிஞர் உதவியோ அல்லது ஆலோசகரின் உதவியையோ பெற்றுத் தருவோம்’ என தெரிவித்துள்ளார்.
‘குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன. கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதற்கென்று சட்ட நடவடிக்கையும் உள்ளது. இன்னொருவரின் பிரச்னைக்கு, வலிகளுக்கு நடிகர்களாகிய நாம் நீதி சொல்லும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க வேதனையாக உள்ளது. நாம் இதை நிறுத்த வேண்டும். நாம் கற்ற கலைகளுக்கு மட்டுமே நாம் தொகுப்பாளர்களாகவும் நீதிபதிகளாகவும் இருப்போம்..ப்ளீஸ்..” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகர் குஷ்பூ ஆகியோர் குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து ‘நீதி சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக