ஞாயிறு, 27 நவம்பர், 2016

பாகிஸ்தான் நடிகை குயிஸ்மத் பெயிக் சுட்டுகொலை .. கராச்சியில் ..


பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த குயிஸ்மட் பெய்க் நடிகை மற்றும் நடன மங்கை. தியேட்டரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து கார் மற்றும் பைக்கில் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கால் மற்றும் வயிறு பகுதிகளில் 11 முறை சுடப்பட்டு, குண்டுகள் பாய்ந்தன. “குயிஸ்மட் இனி நீ எப்படி ஆடுவாய்” என்று ஒருவன் அப்போது கேட்டுள்ளான். நடிகையின் டிரைவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே இந்த நடிகையை கொல்ல முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. நடிகையின் முன்னாள் காதலனான தொழிலதிபர் ஒருவர் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகை குவான்டீல் பலூச் என்பவரை அவரது சகோதரரே சுட்டுக் கொன்றது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: