விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய மில்லர் ஞாபகார்த்தமாக சிலையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டின் பின்னர். குடாநாட்டினில் இருந்த பெரும்பாலõன நினைவுச் சின்னங்கள், இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் மில்லர் ஞாபகார்த்த சிலையும் இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் முதல் கரும்புலித் தாக்குதலின் நினைவு எச்சமாக, சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்திருந்தது. அக்கட்டிடத் தொகுதியையே இடித்து அகற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக