ஞாயிறு, 10 ஜூலை, 2011

பாடகி சித்ரா ரெக்கார்டிங் தியேட்டரில் கதறினார்







பூவே பூச்சூட வா படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா...‘ என்று சின்னவர் முதல் பெரியவர் வரை அனை வரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத் தப்பட்ட அவர் பிறப்பால் மலையாளி.

இருப்பினும் தமிழ் மொழியில் பாடி அசத்தினார். ஏராளமான ரசிகர்களை குயில் குரலால் கட்டிப்போட்டிருந்த அவர் இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருது களையும் தட்டி வந்துள்ளார்.

அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
லட்சக்கணக்கான ரசிகர்களை தனது பாடல்கள் மூலம் லயிக்க வைத்த சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியாமல் பாடுவதையே நிறுத்தினார்.

சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார்.

`இஷம் + ஸ்நேகம் = அம்மா‘ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண் டார்.
இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல்... பின் கேட்கவா வேண்டும்... தனது பாசத்தை அந்த பாடலில் பிழிந்து கொடுத்தார்.
சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடலை பாடும்போது ரெக் கார்டிங் தியேட்டரில் பீறிட்டு வந்த அழுகையை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. கதறினார்... அங்கிருந்தவர்களும் கரைந்தனர்.

கருத்துகள் இல்லை: