ஞாயிறு, 10 ஜூலை, 2011

கலைஞர் ஆவேசம்: நடப்பது ஜனநாயக ஆட்சியா? நெருக்கடி கால ஆட்சிமுறையா?


இப்போது நடப்பது ஜனநாயக ஆட்சியா?
நெருக்கடி கால ஆட்சிமுறையா?
: கலைஞர் ஆவேசம்

திமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ள வழக்கறிஞர் அணியினர் தயாராக இருக்க வேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.


இது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


‘’திமுகவினர் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் நாள்தோறும் வழக்குகள் போடப்படுகிறது.


திமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு தடவை வரை எச்சரித்து அதற்கு பிறகே காவல்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


இப்போது நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது நெருக்கடி கால ஆட்சிமுறையா என்பதே புரியாத அளவிற்கு போலீசாருடைய கெடுபிடிகள் பொய் வழக்குகள் நம்மை சுற்றி வருகின்றன.


இது திமுகவை பயமுறுத்துவதற்காக, பீதியடையச் செய்வதற்காக இந்த அரசாங்கம் கையாளுகிற தந்திரமாகும்.

ஆட்சியாளர்களூக்கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்தி தங்கள் ஆட்சியை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்று கருதிக்கொள்கிறார்கள்.


கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்திலே நடைபெறுகிற இந்த அக்கிரமங்களையெல்லாம் கண்டு பாதிக்கப்படுகின்ற தோழர்களுக்கு வழக்கறிஞர் அணி பரிகாரம் காணவேண்டும்.


பாதிக்கப்படும் திமுக தோழர்களூக்கு உதவும் வகையில் வழக்கறிஞர்கள் அணி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இது போன்ற தகவல்களை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலா, தலைமைக்கழகத்திலே இன்று முதல் எந்த நேரமும் இருப்பேன்.


உடனடியாக என்னை கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு ஆங்காங்கு நடைபெறுகின்ற அத்துமீறல்கள் பற்றிய விபவரங்களை தெரிவிக்க வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக வழக்கறிஞர்களின் பட்டியல்களை அந்தந்த மாவட்டச்செயலாளர்கள் தலைமைக்கழகத்திற்கும் முரசொல்லிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: