ஞாயிறு, 31 ஜூலை, 2011

கலைஞர்:அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க, ஜெயலலிதா முயற்சி எடுத்ததாக

"இலங்கை மீது, அமெரிக்க அரசு பொருளாதார தடை விதிக்கவில்லை. அமெரிக்க அரசின் உதவிகளை வரைமுறைப்படுத்த மட்டுமே பரிந்துரைத்தது' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க, ஜெயலலிதா முயற்சி எடுத்ததாக, தமிழக அமைச்சர்கள் விளம்பரம் செய்கின்றனர்.

இதுகுறித்து, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது, அப்படி எதுவும் அமெரிக்காவால் அறிவிக்கப்படவில்லை என்கின்றனர். இலங்கை அரசுக்கு செய்யும் உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக, அமெரிக்க பார்லிமென்ட் வெளியுறவுத் துறைக்கான குழு வாக்களித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வராது. இக்குழுவின் பரிந்துரை, 2012 அக்டோபர் துவக்கத்தில், அமெரிக்க பார்லிமென்டின் செனட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அவைகளில் வைக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பின், நடைமுறைக்கு வரும்.

இதுகுறித்து, கடந்த பல வாரங்களாக அமெரிக்க குழு ஆலோசித்துள்ளது. இதற்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியின் இந்திய பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை. மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் தான், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விவாதிப்பாரே தவிர, ஒரு மாநில அரசிடம் விவாதிக்க மாட்டார்.
தமிழக முதல்வருடனான ஹிலாரி சந்திப்பில், இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றியோ, இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது பற்றியோ, இருவரும் பேசியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் எதுவும் இல்லை. ஆனால், தமிழக அரசு தீர்மானம் போட்டதால், இலங்கைக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக செய்தி பரப்ப முயல்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: