ஸ்ரீலங்கா தூதரகத்திற்குள் நுழையும் புலிப்பூனைகள்
புலம்பெயர்நாடுகளில் புலியின் தீவிர ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் தீவிரமாக திரிந்தவர்கள் தற்போது ப+னைகளாக ஸ்ரீலங்கா தூதரகங்களினுள் நுழைந்து அரசு ஆதரவாளர்களாக தம்மை காட்டிக்கொள்வதில் முயற்சி செய்து வருகின்றனர். தூதரங்கள் ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அபிவிருத்தி என்கிற பெயரில் இந்தப்ப+னைகள் தமது பipய முகமூடிகளை களைந்துவிட்டு புதிய முகமூடிகளை அணிந்து கொண்டு வருகிறார்கள்.
புலிகள் கொடிகட்டிப்பறந்த காலத்தில் தன்மானம் தாயகவிடுதலை, சிங்களவிரோதம் பேசிய இந்தப்புலிகள் புலிகள் அழித்தொழிக்கப்பட்டபின் ப+னைகளாக மாறிவிட்டார்கள். சந்தர்ப்பவாதிகளான இவர்களை வைத்து இலங்கைத்தூதரகம் என்ன செய்யப்போகிறது?. பெட்டிக்கடை போடக்கூட லாயக்கில்லாத இந்த வெற்றுக்கோம்பைகள் தமது அலுவல்களை நிறைவேற்றும் நோக்குடன் தூதரங்களில் நுழைந்துள்ளனர். இவர்களே புலம்பெயர் புலிகளை காட்டிக் கொடுக்கின்ற நரிகளாகவும் இருக்கின்றனர்.
இவர்களது கடந்தகால நடவடிக்கைகள் பற்றி தூதரங்களுக்கு எந்தளவு தெரியும்?. ஸ்ரீலங்கா அரசை நெருக்கடிகளுக்குள்ளாக்கிய போராட்டங்களில் இந்தப்பூனைகள் கலந்து கொண்ட விபரங்கள் தூதரங்களுக்குத் தெரியாதா?. இதில் வேடிக்கை என்னவெனில் புலிகளுக்கெதிரான கடந்த காலங்களில் கடும் போராட்டங்கள் நடாத்தியவர்கள் எவரும் தூதரங்களுக்கு உளவு சொல்ல முன்வந்ததில்லை. புலிகளின் காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களே தற்போது காட்டிக்கொடுக்கின்ற வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றனர்.
இந்தப்ப+னைகள் நாளை அரசாங்கத்திற்கு எதிராக எந்த பேய்களுடனும் சேரும் என்கிற விபரம் தூதரக அதிகாரிகளுக்குத் தெரியுமா?. தமது சுயதேவைகளுக்காக தூதரக அதிகாரிகளுடன் சேர்ந்திருக்கும் இந்தப்ப+னைகள் தமிழ்ச்சமூகத்திற்கு என்ன நன்மைகளைச் செய்து விடப்போகிறார்கள்?.
இதுகளை வைத்துக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகள் விபரங்களைத் திரட்டினால் அதில் எந்தவித பிரயோசனமும் அரசுக்கு கிடைக்கப்போவதில்லை. பெரும்பாலும் தனிப்பட்ட குரொதங்களின் வெளிப்பாடாக இந்தத்தகவல்கள் இருக்கும் என்பதில் எந்தவித சம்பந்தமுமில்லை.
இலங்கை அரசு தனக்கு சாதகமாக கே.பியை பயன்படுத்தியது. புலிகள் விடயத்தில் கே.பியால் அரசு அடைந்த நன்மைகள் அதிகம். ஆனால் புலிகளை தோற்கடித்த சரத்தை கையாளும் விடயத்தில் சிங்கள மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த அதிருப்தி வளருவதற்கு கே.பிக்கு அரசு கொடுத்து வருகின்ற வசதிகள்தான் காரணம்.
இதுபொல்தான் ப+னைகளாக மாறியிருக்கும் புலம்பெயர் புலி விசுவாசிகளை ஸ்ரீலங்கா தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பதால் புலிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கலாம். ஆனால் இவை பரவலாக வெளிவரும் பட்சத்தில் அரசு மீதான அதிருப்தி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம். இதை ஸ்ரீலங்கா தூதரக அதிகாரிகள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. புலிகளை நம்பி நாறிக்கெட்ட நோர்வே நமக்கெல்லாம் நல்ல உதாரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக