ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பல்கலைக்கழகம் என்றவுடன் வன்முறை நினைவுக்கு வரும் அளவுக்குச் சில காலமாகப்

அரசியல் சதுரங்கத்தில் பல்கலை மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவர்களின் வன்முறைச் செய ற்பாடுகள் பற்றியும் அதனால் மாணவ சமுதாய த்துக்கும் பெற்றோருக்கும் ஏற்படக்கூடிய பாதிப் புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். மாணவர்கள் ஸ்தாபன ரீதியாகத் தமது உரிமைக் கோரி க்கைகளை முன்வைப்பது தவறான செயலென யாரும் கூற முடியாது. ஆனால் கோரிக்கைகளை வென்றெடு ப்பதற்கான செயற்பாடு வன்முறை வடிவத்தை எடுப் பதை அங்கீகரிக்க முடியாது.
றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் உபவேந்தரைத் தாக்கியிருப்பது மிலேச் சத்தனமான செயல். மோதலில் ஈடுபட்டிருந்த மாண வர்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்காகச் சென்ற போதே உபவேந்தர் தாக்கப்பட்டுள்ளார். இதே பல்கலைக்கழகத்தில் முன்னர் நடைபெற்ற வேறொரு வன்முறைச் சம்பவத்தில் ஒரு மாணவன் உயிரிழந்தி ருக்கின்றான்.
பல்கலைக்கழகம் என்றவுடன் வன்முறை நினைவுக்கு வரும் அளவுக்குச் சில காலமாகப் பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து வருகின்றனர். இவர்களின் செய ற்பாடுகள் காரணமாக எத்தனையோ தடவைகள் பல பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கி ன்றன. மாணவர்கள் தாங்களாகவே இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாகாது. அரசியல் கட்சியொன்று மாணவர்களை வன்முறைக்கு வழிநடத்துகின்றது என்பதைப் புரிந்து கொள்வதொன்றும் சிரமமானதல்ல.
இம் மாண வர்கள் அங்கத்துவம் வகிக்கும் சங்கத்தின் அரசியல் பின்னணியைப் புரிந்து கொண்டால் இவர்களை வழி நடத்தும் அரசியல் கட்சி எது என்பது விளங்கி விடும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் தலைமையை ஏற்றிருக்கும் மாணவர் சங்கமே வன்மு றைச் செயற்பாட்டுக்கு மாணவர்களைத் தூண்டுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி இன்று மக்களால் ஒதுக் கப்பட்ட நிலையில் இருக்கின்ற அரசியல் கட்சி. தனது பிரதான ஆதரவுத்தளமாக எந்தவொரு சமூக சக்தி யையும் இனங்காட்ட முடியாத நிலையில் அக் கட்சி இருக்கின்றது. இவர்கள் சிவப்புக் கொடியுடனும் சோஷ லிசக் கோஷங்களுடனும் நடை போடுகின்ற போதி லும் தொழிலாளி வர்க்கமோ சோஷலிஸ்டுகளோ இவ ர்களுடன் இல்லை. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்க ளின் பிரதிநிதியாகத் தன்னை இனங்காட்டுவதற்கு மக் கள் விடுதலை முன்னணி மேற்கொண்ட முயற்சியும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இப்போது கல் லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை அணி திரட்டி அவர்களைப் பிரதான ஆதரவு சக்தியாக வைத்திருக்கும் முயற்சியில் இக் கட்சி ஈடுபட்டிருக் கின்றது.
நாற்பது வருடங்களுக்கு முன், தவறான வழிகாட்டலின் மூலம் இளம் சந்ததியினர் பல்லாயிரக் கணக்கானோ ரைப் பலிகொடுத்த வரலாற்றை மீண்டும் புதுப்பிப்ப தற்கு மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பது போல் தெரிகின்றது. மாணவர்களின் கல்வி பாழாகி னாலும் பரவாயில்லை என்று அவர்களைத் தன் அர சியல் சதுரங்கத்தில் பகடைக் காய்களாக இக் கட்சி பயன்படுத்துகின்றது.
தவறாக வழிநடத்தப்படும் மாணவர்களின் பெற்றோர் இப் போதே விழித்துக் கொள்ள வேண்டும். தங்கள் பிள் ளைகளின் கல்வி பாழாகுவதைத் தவிர்ப்பதற்கு வேண் டிய நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
(தினகரன்)

கருத்துகள் இல்லை: