ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ஆசிரியர் தாக்கி மாணவரின் கை முறிந்துள்ளது.பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

<மாணவரின் கையை முறித்த விளையாட்டுத்துறை ஆசிரியர்ரத்தினபுரியில் உள்ள ரபுக்க என்ற பாடசாலையில் பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கியமையால் குறித்த மாணவரின் கை முறிந்துள்ளது இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுஅசேல லியனகே என்ற இந்த 13 வயது மாணவர் பாடசாலையி;ல் விளையாட்டு பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அவரது விளையாட்டு ஆசிரியர் ஈட்டி எறிதல் பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்தார்

இதன் போது அசேல பலகையினால் செய்யப்பட்ட ஈட்டியை எறிந்தபோது அது உரிய முறையி;ல் எறியப்படவில்லை. இதனையடுத்து விளையாட்டுத்துறை ஆசிரியர் மாணவரை குறித்த ஈட்டியால் தாக்கியுள்ளார்

இதனையடுத்து முதலுதவி மேற்கொள்ளப்பட்ட மாணவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது மாணவரின் கை முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் பொலிஸில் மாணவரின் பெற்றோர் முறையிட்ட போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியரை அழைத்து பேசிய பின்னர் அவரிடம் இருந்து ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ளுமாறு மாணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்

எனினும் இதனை ஏற்க மறுத்த மாணவரின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமது மகளுக்கு நியாயம் கோரி முறையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: