ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

இந்திய தூதரகம் ,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சேவையை வழங்கும்.

வடக்கை முழுமையாக மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல ஆவணம் பரிமாற்றம்
 யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்தியாவின் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களை அமைப்பது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக எழுத்துமூல ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் சி.ஆர்.ஜயசிங்கவும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவும் இந்த ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த ஜூனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தியப் பிரதமருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகத்தைத் திறப்பதென இரு தலைவர்களும் இணங்கியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும்வலுப்படுத்துவதற்காக இராஜதந்திரப்பிரதிநிதிகள் அலுவலகங்களைத் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதேசமயம், புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் இயங்கும் சென்னை, மும்பையிலுள்ள துணைத் தூதரகங்களுடன் மேலதிகமாகத் துணைத்தூதரகங்களை அமைப்பதற்கான இலங்கையின் ஆர்வத்தையும் இந்தியப் பிரதமர் வரவேற்றிருந்தார். இந்தப் புரிந்துணர்வை உத்தியோகபூர்வமான ஏற்பாடாக உருவாக்குவதற்காக நேற்று இருநாடுகளும் எழுத்துமூல ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.இதன்பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகமானது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சேவையை வழங்கும். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்டங்களுக்கான சேவையை வழங்கும். (மொனராகல மாவட்டமானது கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரகத்தின் கீழ் மாற்றப்படும்.) பரஸ்பர இணக்கத்துடன் இந்த இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலக மாவட்டமானது விரிவுபடுத்தப்படும்

கருத்துகள் இல்லை: