சாவகச்சேரி: வடலூரில் அவதரித்த வள்ளலாரின், சமரச சுத்த சன்மார்க்க சபை மற்றும் சத்தியஞானகோட்டம் இலங்கை சாவகச்சேரி, வேம்பிராயில் புதிதாக திறக்கப்படவுள்ளது. இந்த சபையில் வழிபாடு செய்வதற்கான திருநிலைக்கண்ணாடி, வடலூர் சித்திவளாகத் திருமாளிகையில், கடந்த ஜூன் 29 முதல் 48 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் 15 ம் தேதி இது நிறைவுபெறுகிறது.>ஆக., 16 ல், மருதூர், கருங்குழி, நீரோடை, தருமச்சாலை, சத்தியஞானசபை, சித்திவளாகம் ஆகிய இடங்களுக்கு கண்ணாடி ஊர்வலம் செல்கிறது. பின், இலங்கைக்கு கண்ணாடி கொண்டு செல்லப்படுகிறது. ஆக., 17 முதல் செப்., 7 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா நாட்களில் வள்ளலார் குறித்த இசைநிகழ்ச்சி, கச்சேரி, கருத்தரங்கு, நாடகம்போன்றவை இடம்பெறுகின்றன. சத்திய ஞான கோட்டம் ஆக. 23 அதிகாலை 3.30 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை சாவகச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சாவகச் சேரிக்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடியின் முன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) திரு அருட்பா முற்றோதல் நடைபெற உள்ளது.திரு நிலைக் கண்ணாடி வழிபாடு நிறைவுபெறல்.திங்கள்>திரு நிலைக் கண்ணாடியுடன், மருதூர், கருங்குழி, தீஞ்சுவை நீரோடை, மேட்டுக்குப்பம், வடலூர் சத்திய தருமச் சாலை, வடலூர் சத்திய ஞான சபை ஆகியவற்றில் வழிபாடு செய்து சுற்றி வரல் செவ்வாய் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருநிலைக் கண்ணாடியுடன் கொழும்பு வந்தடைதல். திரிகோணமலை சென்று பின்னர் திருக்கோணேஸ்வரத்தில் வழிபாடு செய்தல் புதன் மன்னார் சென்று திருக்கேத்தீஸ்வரத்தில் வழிபாடு செய்தல்.இரவு – சாவகச்சேரி வந்தடைதல் வியாழன் ஜீவ காருண்யம், உயிரிரக்கம் பற்றி 3 இடங்களில் ஊர்வலம் நடத்துதல்.யாழ்ப்பாணம்-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் துவங்குதல்..உயிரிரக்கத்தை வலியுறுத்தி இவ்வூர்வலம் நடைபெறும்.இந்து சமயப் பேரவையில் துவங்கி, சிவதொண்டன் நிலையத்தில் நிறைவடைதல்.வெள்ளி அளவெட்டி-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் கேணிக்கரை-வைரவர் கோயிலில் ஆரம்பித்து கும்பிளாவளை பிள்ளையார் கோவிலில் நிறைவடைதல்.இரவு – செல்வச் சன்னிதி அடைந்து திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தல் சனி சாவகச்சேரி..- ஊர்வலம் சிவன் கோவிலில் ஆரம்பித்து வேம்பிராய் பூத விராயர் கோயிலில் நிறைவடைதல்.ஞாயிறு வேம்பிராய்-எல்லாம் வல்ல அருட்தந்தை இராமலிங்கப் பெருமானை சிங்காதனத்தில் வைத்து..வணங்குதல். திரு அருட்பா பாராயணம் மற்றும் வழிபாடு செய்தல திங்கள் வேம்பிராய்-சத்திய தர்மச்சாலை திறப்பு விழா.செவ்வாய் சத்திய ஞான கோட்டத்தின் திருக்கதவம் திறப்பு விழா திறந்த பின் ஜோதி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலவறை வழிபாடு..நாள் ஒன்றுக்கு 6 முறை என்ற வீதத்தில் 8 நாட்கள் வழிபாடு 48 முறை நடைபெறல்.நிலவறை வழிபாடு நிறைவு செய்தலஇரவு 8 மணிக்கு-யந்திரப் பிரதிஷ்டை செய்தல் காலை 5.00 மணிக்கு திருநிலைக் கண்ணாடி வழிபாடு செய்து ஜோதி பீடத்தில் பொருத்துதல்.ஜோதி பீடம், சிற்சபை, பொற்சபை ஆகியவற்றிற்கு நீராட்டி முடிவைத்தல்.சத்திய ஞான கோட்டத்தில் உள்ளேயிருந்து வழிபாடு செய்தல்.காலை 5.00 மணி அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல் காலை 6.00 மணி – ஜோதி வழிபாடு துவக்கம். திரைகளை நீக்கி ஜாதி மத வேறுபாடின்றி ஜோதி தரிசனம் காண்பித்தல்.காலை 10 மணி மதியம் 1 மணி மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கு-வடலூரில் சத்திய ஞான சபையில் திரை நீக்கி 6 முறை அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிப்பது போன்று காண்பித்தல்.ஒரு புறம் ஜோதி தரிசனம் காண்பித்தல் மறு புறம் விசேட நிகழ்ச்சிகள்… சொற்பொழிவு..வள்ளலார் வரலாற்று நாடகம் திரு அருட்பா நடனம் மழையூர் சதாசிவம் திரு அருட்பா இசைக் கச்சேரி..முதலானவை மறுநாள் (7.9.2010) காலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த வைபவம் முடிவடைந்த பின்னர். வடலூரில் சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதப் பூசத்தின் போதும் 6 திரை நீக்கி ஜோதி வழிபாடு காண்பிப்பதைப் போன்றே. வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திலும் அருட்பெருஞ் ஜோதி வழிபாடு நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், பல்வேறு நாடுகளிலுமிருந்தும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் நலம் பெறும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.கனகசபாபதி கேத்தீஸ்வரன், கே, விஜயலக்ஷ்மி, கே.தயானந்தன்.இது குறித்த விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக