Ling Chinnaav : If you don't have bread,Please manage with cakes... என்பதாகத்தான் தம்மை ஒரு மேட்டு குடியாக காட்டிக்கொள்ள விரும்பும் கொழும்பு வாழ் துபாய் வாழ் கனடா வாழ் மலையக இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.
இவர்கள் டாலரில் சம்பளம் வாங்குவதனால், சக அறிவிப்பாளரோடு ஃபோர்க்கில் சாப்பிடுவதனால், பகல் சாப்பாட்டுக்கு பீட்ஸா சாப்பிடுவதனால், பிக் மீயில் செல்வதனால் தேசிய நீரோட்டத்தில் சட்ட பூர்வமாக தாம் இணைந்துவிட்டதாக நினைத்து கொண்டு இன்னும் ஏண்டா ஏழை, கஷ்டம், ஆயிரம் ரூபாய் சம்பளம்ன்னு பொலம்புறீங்க என்ற கேள்வியை தான் பிரதானபடுத்துகிரார்கள்.
நிற்கும் நிலம் எனதில்லை என்ற வலியை இவர்கள் தொடர்ந்து ஏளன படுத்த முயற்சித்து கொண்டே இருக்கின்றார்கள்.
உண்மையில் மலையகத்தைவிட வறுமையில் இருப்பது யாழ்பாணம்தான். திடுக்கிட வேண்டாம்.
நிஜம்தான். அது வெளியில் வராது.
நல்லூர் திருவிழா அதை வெளியில் காட்ட விடாது.
போதாததற்கு டி ஜே நிகழ்ச்சிகளும் ஹெலிகாப்டர் சாமத்திய நிகழ்வுகளும் வறுமையில் வாடும் கை கால் இழந்த மக்களின் வலியை வெளிக்கொண்டு வராது.
இது ஒருவகையான அரசியல். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிவிடுதல் போல கைலாகாத அரசியல் யாழ்ப்பாணத்திலும் இருக்கிறது.
அப்போ ஜாலியாக இருக்க கூடாதா?
ஒரு குஜால் எந்த ஒரு வகையிலும் வலி சுமக்கும் மக்களின் அரசியலை நீர்த்து போக செய்ய கூடாது.
ஈழ திரைப்படங்களை கூட பாருங்களேன், ஒன்று கூட உருப்படியாக இருக்காது.
வீரத்தை பறைசாற்றும் முகமாக நிஜமான சமூக அரசியலை பேச மாட்டார்கள்.
எதோ ஒருவகையில் அடித்து பிடித்து அரசாங்கத்தை காப்பாற்றி விடுவார்கள். மீ யதார்த்தமாக இருக்கும்.
அல்லது ஜாலியாக வாழ்வதாக இருக்கும்.
போலி கௌரவத்தால் நிஜமான வலி எப்போதும் தீராது என்பது எத்தனை ஆபத்தான செயல்பாடு..!
கோபம் வந்தால் வந்துவிட்டு போகட்டும், உணர்ந்தால் போதும்.
உலகதரத்தில் கதை வைத்துகொண்டு,பணமும் வைத்துகொண்டு உருப்படியாக இயங்காத ஒரே சினிமா துறை ஈழ சினிமாத்துறை மட்டும்தான் என்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் இருக்கிறது.
அதே போலதான் இந்த மேட்டுகுடி மலையக இளைஞர்களும்.
இவர்களுக்கு சக நண்பர்களின், தன் முதலாளியின் மரியாதை எந்தளவு முக்கியமோ அதை விட நூறு மடங்கு இங்கு வாழும் ஆயிரம் ரூபாய் சம்பளதிற்கும், பிள்ளைக்கு கொப்பி பென்சில் வாங்க படாதப்பாடு படும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் எங்களுக்கு முக்கியம்.
மற்றது நீங்களெல்லாம் எலக்ஷனுக்கு கூட ஊரு பக்கம் வராதவர்கள். சொல்ல போனால் ஒருவகையில் அரசிற்கு எதிரான திருடர்கள். உண்மையில் சொல்வதென்றால் திகாவுக்கோ (பழனி திகாம்பரம் , ஜீவனுக்கோ
ஜீவன் தொண்டமான்) எந்த வகையிலும் லாயக்கற்றவர்கள் நீங்கள்தான்.
நாங்கள் எதாவது நல்லது நடக்குமா என்று ஏக்கத்தில் விடிய காலையில் வரிசையில் நின்று வாக்களித்தவர்கள் எங்களுக்கு போலி கௌரவமும் குஜால் அரசியல் நிகழ்வுகளும் முக்கியமே இல்லை.
தேவை நிஜமான சமூக விமோசனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக