Ravi Kumar : சங்கிகளுக்கும் திமுக உ பி களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
திமுகவில் இருக்கிற ஒருவர் ஒரு நூலை எழுதினால் அந்த நூலை வாங்கிப் படிப்பதோ அதைப்பற்றி பேசுவதோ அல்லது எழுதுவதோ அல்லது அந்த நூலைப் பிரபலப்படுத்துவதோ திமுககாரர்களுக்கு பிடிக்காத வேலை.
என்றைக்குமே அதை வெகு எளிதாக அவர்கள் கடந்து போவார்கள்.
எவனோ ஒரு பைத்தியக்காரன் எதையோ கிறுக்கி வைத்திருக்கிறான் இதை நாம் ஏன் வாங்க வேண்டும்? நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?
நாம் ஏன் இதற்காக பரப்புரை செய்ய வேண்டும் என்பதுதான் இங்கே சமூக வலைதளங்களில் களமாடிக் கொண்டிருக்கிற சோ கால்ட் திமுக காரர்களின் மனநிலை.
ஆனால் சங்கிகள் அப்படி அல்ல.சங்கிகளின் கொள்கை வெறி இன்று இந்தியா முழுவதும் பரவி வீழ்த்தவே முடியாத சக்தியாக பாரதிய ஜனதா கட்சியை மாற்றியுள்ளது.
1950 களிலும் அறுபதுகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்ததோ அதையே தான் பரப்புரையாக இன்று பிஜேபி செய்து வருகிறது.
திமுக அன்று உரிமைக்காக போராடியது.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இன்று அந்தப் பரப்புரை பாணியைக் காப்பி அடித்து மத துவேஷத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு வென்றுள்ளது.
ஆனால் நமது திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களோ தமது பழைய பாணியை கைவிட்டு விட்டு சுயநலத்தோடும், கொள்கைப் பிரச்சாரத்தை ஆதரிக்காது, ஏனோதானோ என்று நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா தட் இஸ் பாரத் என்கிற ஒரு குப்பை நூலை ஒரு சங்கி எழுதி இருக்கிறார்.
அந்த நூல் இன்று அமேசானில் பெஸ்ட் செல்லெர்.
அதற்குக் கிட்டத்தட்ட 1000 மதிப்புரைகள் எழுதப்பட்டுள்ளன.
அந்த நூலை வைரல் ஆகப் பரப்புகிறார்கள் சங்கிகள்.
வட இந்தியா முழுவதும் உள்ள நடைபாதைக் கடைகளில் பெருமளவில் விற்கப்படுகிறது.
ஆங்கிலம் படிக்கத் தெரியாத சங்கீ கூட அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு போய் தனது ஆதரவை தெரிவிக்கிறான்.
ஆனால்...நம் உடன் பிறப்புக்களோ,நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழைப் பரப்பும் நூல்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் காட்டுகின்றனர்.
கழகத்துக்காக களம் ஆடுகிற, கொள்கைகளை பரப்புகிற எந்த எழுத்தாளனையும் உதாசீனப்படுத்தி இப்படி சுயநலமாக இருப்பதால்தான் நாம் அடிக்கடி தோற்றுப் போகிறோம்.
கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவில்லை என்றால் அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நீண்ட நாள் நிலைக்க முடியாது என்பது உலகம் இன்று வரை பார்த்திருக்கின்ற சரித்திரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக