ஞாயிறு, 21 ஜனவரி, 2024

யாழ்ப்பாணத்தில் கடைகளை எரிக்க பெல்ஜியத்தில் இருந்து பணம் கொடுத்த தமிழ் பெண்

 ceylonmirror.net - jeevan : கோடிக் கணக்கான சொத்துகளை தீயிட்டு கொளுத்த ஒப்பந்தம் போட்டவர் பெல்ஜியத்தில் வாழும் யாழ்பாண பெண்னொருவராம்.
பெல்ஜியத்தில் வசிக்கும் யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒப்பந்தம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரமாண்ட துணி கடைக்கு தீ வைத்துள்ளது குறித்து போலீசார் கண்டறிந்து , சம்பந்தப்பட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
யாழ்.நகரில் தீயினால் நாசமான ஜவுளிக்கடை, ஒப்பந்தத்தின் பேரில் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும், அதற்கான ஒப்பந்தம் பெல்ஜியத்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் , யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் மூவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரண்டு வாரங்களுக்கு முன், இந்த ஜவுளிக்கடை எரிந்ததில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிப் பொருட்களும், கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது.

பெல்ஜியத்தில் உள்ள யாழ்ப்பாணப் பெண்ணுக்கும், யாழில் ஜவுளிக் கடை நடத்தும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலுக்காக பழிவாங்கவே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு நபர் ஒருவர் வழங்கிய தகவலின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்ட நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பொலிசார் இவரை கைது செய்து விசாரணை செய்த போது, ​​தற்போது பெல்ஜியத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் இக்கடையை தீயிட்டு கொளுத்த , சந்தேகநபர் மற்றும் இருவருக்கு 12 இலட்சம் ரூபா ஒப்பந்தம் வழங்கியது தெரியவந்துள்ளது.

ஒப்பந்தத்தின் முதற்பகுதியில் ஏழு இலட்சம் ரூபா தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், இச்சந்தேக நபர் பெற்ற தொகையில் ஒன்றரை இலட்சம் ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் கொடுத்த பணத்தில் இருவரும் வாங்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களது வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரண்டு வாள்கள் மற்றும் நான்கு கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், கடைக்கு தீ வைக்கச் சென்ற சந்தேகநபர்கள் இந்த வாள்கள் மற்றும் கத்திகளையும் உடன் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: