மாலை மலர் : கொல்கத்தா மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியது.
சுமார் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல் மந்திரி பகவந்த் மானும் அறிவித்தனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணிக்கு 2 முக்கிய எதிரிகள் உள்ளனர். ஆதிர் ரஞ்சன் பா.ஜ.க.வின் மொழியில் பேசுகிறார். காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என தெரிவித்தார்.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை 3 முறை குறிப்பிட்டு தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக