SWRD.Bandaranayake - J.R.Jayavardana |
TSounthar Sounthar : புகழ்பெற்ற இரு "சிங்கள" இனவாதத் தலைவர்களின் "தமிழ் பூர்வீகம் "!
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் மாற்றினார் .
நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ” [ 1770 இல் பிறந்தார் ] .இவர் கோரலை முதலியாராக இருந்தார்.
இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல் .
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”.
இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா.
இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா.
இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா.
நபர் :2.
தமிழகத்தில் சிறு வயதில் தந்தையை இழந்த தம்பி முதலியார் என்ற தமிழன் கொழும்பில் குடியேறினான்.
ஒல்லாந்துக்கு உளவு பார்த்தல் அவன் செய்த தொழில். தன்னை” ஏட்ரியன் ஜெயவர்த்தன ” என்று பெயர் மாற்றி கொண்டான் தம்பி முதலியார்.
இவரது மகன் தொன் ஏப்ரஹாம் ஜெயவர்த்தன. இவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன.
ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன என்பவரின் மகன் யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன.
இவரது மகனே J.R.ஜெயவர்த்தன.
ஜெயவர்த்தனாவின் மகன் ரவி திருமணம் முடித்ததும் ஒரு தமிழ் பெண்ணையே !
இவர்களும் கிறிஸ்தவர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக