Balasubramania Adityan T : பசுமை விகடனை படித்து எழுச்சி அடையாதீர்கள்...
பசுமை புரட்சி என பெயர் வைத்துதான் நம் இயற்கை விவசாயத்தை அழித்தார்கள்.
இப்படி பசுமை என பெயர் வைத்துக் கொண்டு பசுமை விகடன் செய்யும் பிரசுரிப்புகளை வைத்து இளைஞர்கள் பலர் குழம்புகின்றனர்.
இப்படித்தான் 1 வருஷம் முன்னாடி இலை வாழையில் ஏக்கருக்கு 10 லட்சம் லாபம் என போட்டிருந்தாங்க
கூடவே போன் நம்பரும் போட்டிருந்தாங்க.
இதை பார்த்த நம்ம நண்பர் ஒருத்தர் அந்த அக்ரி ஆபிசர்க்கு கால் பண்ணி என்கிட்ட 12 ஏக்கர் இலை வாழை இருக்கிறது. ஏக்கருக்கு 10 லட்சம் எல்லாம் வேண்டாம் 4 லட்சம் கொடுத்துட்டு நீங்களே வச்சுக்கங்க என சொன்னார்.
கடைசியில் அது இதுன்னு மழுப்பி பேசிட்டடு நான் எழுதியது தப்புதான்னு மன்னிப்பு கேட்டு விட்டு போனை கட் பண்ணி விட்டார்கள்.
எங்கேயோ நிம்மதியாக இருக்கவங்களை இந்த பசுமை விகடன் குரூப் அத்தனை லட்சம் இத்தனை லட்சம் கிடைக்கும் என ஆசை காட்டி இந்த தொழில் பண்ண வைத்து போண்டி ஆக்கிட்டு போய் விடுவானுங்க.
இன்றைய நிலையில் விவசாயத் தொழில் நூறில் ஒருத்தங்களுக்கு சக்சஸ் ஆகிறதே பெரிய விஷயம்.
பல இளைஞர்கள் இதை படிச்சிட்டு,மனதில் கோட்டையை கட்டிக் கொண்டு தொழில் செய்து இப்போது நடுத்தெருவில் நிக்கிறாங்க .
இன்னும் எத்தனை பேர காவு வாங்கப் போகுதோ இந்த பசுமை விகடன் தெரியலை.
இப்படிதான் ஈமு கோழி,அந்த கோழின்னு இலுமினாட்டி அடிமைகளுக்கு ஆதரவாக எழுதி பல விவசாய இளைஞர்கள் கதை பேராசையால் முடிந்து போனது.
இளைஞர்களே...
இயற்கை விவசாய ஆர்வலர்களிடம் நேரில் பேசி போய் பார்த்து பல அனுபவங்கள் பெற்று விவசாயம் செய்ய போங்க.
மரம் ஏறுவது கேவலம், பால் கறப்பது கேவலம், ஏர் பிடிப்பது கேவலம் என்று சாக்கிய பௌத்த யூத மேசானிய கூட்டம் நம்மை ஏமாற்றியதை உணருங்கள்.
மண் வெட்டியை கையில் எடுக்க தயங்காதீர்கள். உங்கள் அனுபவம் உங்களை ஈன்றெடுக்கும். உங்கள் டெக்னாலஜி கல்வியை விளை பொருளை மார்க்கெட்டிங் செய்ய பயன் படுத்துங்கள்.
நீர் வளம்,நில வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இயற்கை விவசாயத்தை மாத்திரமே செய்யுங்கள்.
ஏட்டுச் சரக்காய் கறிக்கு உதவாது.
பசுமை விகடன் சொல்வதை போல் கோழியை வைத்து அடை காக்காமல் DNA மரபியல் மாற்றம் செய்வது,மாடுகளை இயற்கையாக உடல் உறவு செய்ய வைக்காமல் செய்யும் பால் பண்ணைகள் அமைத்தால் குலம் அழியும்.
இவை பாவத் தொழில் பட்டியலில் வரும்.
இன்றைய பத்திரிக்கைகள் எதுவும் குறைந்தபட்ச தர்மத்தை கூட கடைபிடிப்பது இல்லை.
விளம்பரங்களை கண்டு ஏமாறாதிங்க.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
தவறாமல் பகிர்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக