தினமலர் : அகர்தலா: கோவிட் பாதிக்கப்பட்ட 225 கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரிபுரா மாநில அகர்தலா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயந்தா ரே தெரிவித்துள்ளதாவது:கோவிட் முதல் அலையின்போது, தொற்று பாதித்த 198 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றது.
அதில் 60 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது.
கோவிட் 2வது அலையின்போது 27 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
மருத்துவமனையில் பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சம் தொற்று பாதித்த 225 கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். 225-covid -pregnant
அந்த குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவ ஊழியர்கள் பார்த்துக் கொண்டனர். அந்த வகையில் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பங்கு சிறப்பாக அமைந்திருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக