செவ்வாய், 1 ஜூன், 2021

மத்தியரசின் ஜி எஸ் டி வரி குறைப்பு குழுவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆருக்கு இடமில்லையா? தொழில் முனைவோர் கடும் எதிர்ப்பு

 Mariathangaraj Jeyapal | Samayam Tamil   மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து அமைத்துள்ள குழுவில் தமிழகத்துக்கு
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “கொரோனா சார்ந்த, மக்கள் உயிர்காக்கும் பொருட்கள் எவை எல்லாம் உண்டோ அவற்றுக்கு மட்டும் சில மாதங்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு மட்டும் வரிகளை ரத்து செய்யுங்கள். கொரோனா சார்ந்த பொருட்கள், தடுப்பூசி போன்றவற்றுக்கு வரி இருக்க கூடாது.
 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை பூஜ்ஜியமாக்குவதால் பெரிய அளவுக்கு இழப்பு ஏற்படாது மக்களுக்கு நலன் கிடைக்கும்” என்று பேசினார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகத்திலிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்போ அல்லது விலக்கோ கொரோனா சம்பந்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கொடுப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறிய பின்னர் அமைக்கப்பட்ட இந்த குழுவில் பிடிஆருக்கு இடமில்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது, மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஏனென்றால் இந்த குழுவில் எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதாவது மேகாலாயா, குஜராத், மகாரஷ்டிரா, கோவா, ஒடிசா, கேரளா, தெலுங்கானா, உத்திரபிரசேதம் ஆகும். இந்த பிரச்சனையை ஜிஎஸ்டி கவுன்சிலில் எழுப்பியது தமிழகத்தின் நிதியமைச்சர். நிறைய பேருக்கு சம்பளம் இல்லை, வருமானம் இல்லை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் அவர்கள் செலவை குறைப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இதில் கிருமி நாசினி, சோப்புக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது. அதேபோன்று சர்ஜிக்கல் ரப்பர் கையுறைக்கு, வென்டிலேட்டருக்கு 12%, டிஸ்இன்பெக்சனுக்கு, தெர்மா மீட்டருக்கு 18% ஜிஎஸ்டி உள்ளது. இவை அனைத்திற்கும் கொரோனா நோய் தாக்கம் இருக்கும் வரை விலக்கு கொடுக்க வேண்டும் என் முதன்முதலாக குரல் கொடுத்தது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தான்.
டெல்லி செல்லும் ஸ்டாலின்: அரண்டு நிற்கும் முன்னாள் அமைச்சர்கள்!

தமிழகம் தொழில்துறையில் அதிக ஜிஎஸ்டியை ஈட்டித் தரும் மாநிலம். இந்த குழுவில் தமிழகம் இடம்பெறாது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் கூடாது. இது சாமானிய, எளிய மக்களுடைய வாழ்வாதார பிரச்சினை. நோயில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரக்கூடிய நேரத்தில் இது மத்திய அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய யோசனை தான். எனவே இந்த குழுவை உடனடியாக மாற்றியமைத்து குழுவில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: