மாலைமலர் :கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கோவையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது.
ஆனால் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மற்றும் திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டத்திற்காக 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
முன்னாதாக, ஈரோடு, திருப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக