LRJ : “மத்திய அரசுக்கு அடிமையா நடந்தா என்ன தப்பு? அவங்களை அனுசரிச்சி போயி மக்களுக்கு நன்மை செய்தா சரிதானே ப்ரூ?” எடப்பாடி பாறைகள்.
“உதய்னாவுக்கு ஜால்ரா அடிச்சா என்னங்க தப்பு? அவர் மூலமா மக்களுக்கு நல்லது நடந்தா சரிதானே புரோ?”
உதயநிதி ரசிகர் மன்ற உறுப்பினர்கள்.
இதுல ஈயத்தைப்பார்த்து இளிச்சதாம் பித்தாளைன்னு இதுக அதுகளைப்பார்த்து அடிமைக்கூட்டம்னு பேசுதுக. கெரகம்.
பகுத்தறிவு, குறைந்தபட்ச சுயமரியாதை, உட்கட்சி ஜனநாயகம் எல்லாம் அடுத்தவனுக்குன்னா ஆயிரத்தெட்டு உபதேசம்.
ஆனா அதுவே நம்ம வீட்டு அராத்து எந்தவித அதிகாரமும் இல்லாமல் முடிசூடாத முதல்வராக வலம் வந்தா அது மக்கள் சேவை. அதுல என்னா தப்புன்னு வியாக்கியானம். மக்களுக்கு நல்லது தானேன்னு நியாயப்படுத்தல். எம்பூட்டு தெளிவு. எம்பூட்டு தெளிவு.
இதுல இவுக பெரிய பெரிய பட்டமெல்லாம் படிச்சவுக. வெளிநாட்டுக்கெல்லாம் பறந்தவுக. ஒரு அரசியல் கட்சியின் குறைந்தபட்ச உட்கட்சி ஜனநாயகமும் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி சீரழிவது பற்றின எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அதை சரின்னு வாதாட கூச்சம் ஏற்படாதா?
உங்களின் குறைந்தபட்ச ஜனநாயக அரசியல் அளவுகோள் எது?
இப்படியே நடத்துங்க. நீங்க நெனைக்கறதைவிட அவர் எதிர்பார்க்கறதைவிட வேகமா முட்டுச்சந்து வரும். முட்டும்போது தெரியும் நீங்க எம்பூட்டு பெரிய மூடர் கூடம்னு.
எம்ஜிஆர் தன்னோடு ஜோடியாய் நடித்த ஜெயலலிதாவை கட்சிக்குள் திணித்து கட்சியின் மூத்த தலைவர்களையெல்லாம் அவமதித்து ஓரம்கட்டி ஒதுக்கி வைத்த அதே ஆங்காரத்துடன் இது எங்கப்பன் கட்சி நான் நினைத்தால் என்னவும் செய்வேன் என் மகனுக்கு முடிசூட்டுவேன் என்கிற ஆணவச்செறுக்குடன் தன் மகனை கட்சியிலும் ஆட்சியிலும் திணித்துக்கொண்டிருக்கிறார் மு க ஸ்டாலின்.
அது திமுக என்கிற அரசியல் கட்சியை இன்னொரு அதிமுகவாக, ஸ்டாலின்/உதயநிதி ரசிகர் மன்றமாக வேகமாக சீரழிக்கும் என்பது தான் பிரச்சனையே. அதன் விளைவு தமிழ்நாட்டு அரசியலை வெறும் உதிரிகளின் கூட்டமாக மாற்றிவிடும். சந்தேகமிருந்தால் ஸ்டாலின் அமைச்சரவையில் உண்மையான அதிகாரமிக்க இலாகாக்கள் யாரிடம் இருக்கின்றன?
கட்சியின் மூத்த தலைவர்கள் எப்படி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் குறைந்தபட்சம் அரசியல் என்றால் என்ன என்று தெரிந்த யாரிடமாவது கேட்டுத்தெளியுங்கள் இணைய தத்திகளே.
சமூக ஊடக அரசியல் வேறு. சமூகத்தின் அரசியல்வேறு. உண்மையான கட்சிக்காரனிடம் கூட அரசியல் விவாதிக்கமுடியும். சமூக ஊடக ரௌடிக்கூட்டத்திடம் அரசியல் பேசுவது வீண் வேலை. திமுகவுக்குள் இருக்கும் மூத்த அரசியல்வாதிகள் எப்படி கொந்தளித்துப்போயிருக்கிறார்கள் என்று இந்த மண்ணாந்தைகளுக்கு தெரியாது.
ஏனெனில் இவை சமூக ஊடக மண்ணாந்தைகள்.
தமிழ்நாட்டின் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே ஒன்றையடுத்து மற்றொன்று என அடுத்தடுத்து பிளவுபடும். திமுகவின் அதிகாரம் அதனால் வரக்கூடிய கோடிக்கணக்கான வருமானம் திமுக பிளவை பெருமளவு தடுக்கப்பார்க்கும். ஆனால் அது எத்தனை ஆண்டுகளுக்கு முடியும் என்பது ஸ்டாலின் குடும்பத்தின் நடத்தையை பொறுத்து அமையும்.
சமூக ஊடக ரௌடிக்கூட்டமே கொஞ்சம் பொறுங்கள். உங்கள் ஒட்டுமொத்த energyயையும் என்னிடம் விரயமாக்காதீர்கள்.
விரைவில் அது உங்களுக்கு வேறு வேலைகளுக்கு தேவைப்படும். ஆமாம் மறந்துடப்போறேன். மகனை மட்டுமே பாராட்டிக்கொண்டிருந்தால் எப்படி?
மருமகனுக்கு ஆலாத்தி தட்டு தயார் செய்துவிட்டீர்களா?
எதுக்கும் தயாரா இருங்க. அவர் நானும் டில்லிக்குப்போவேன்னு ஸ்வெட்டரும் சால்வையுமா ரெடியா நிக்கறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக