Sundar P : வேட்டியை மடித்துக் கட்டிகொண்டு மார்பில் துண்டை பரப்பிக் கொண்டு சைக்கிள் கேரியரில் ஒரு சாக்கு மூட்டையை கட்டிக்கொண்டு லோடு அடிக்கும் இவரைத் தெரிகிறதா?
ஆம்... சரிதான்.... நீங்கள் நினைப்பது சரிதான்.
பாபா ராம்தேவே தான்.
ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் இன்றைய சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பயின்றார்...
பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா போன்றவற்றைக் கற்றுக் கொண்டார்.
உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார்.
அதன் பின் திவ்யா யோக மந்திர் டிரஸ்டு என்ற ஒன்றைத் துவங்கினார்
இன்று 36க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளன.
பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர்வேதிக் என்ற எப்எம்சிஜி நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.1,000 கோடியை அடுத்த ஆண்டு முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பதஞ்சலி நெய் பதஞ்சலி நூடுல்ஸ் பதஞ்சலி பிஸ்கட் என்று பல பொருட்கள் சந்தையில் வந்து கொண்டிக்கின்றன.
அது போலவே ஏற்றுமதி மற்றும் இ-காமர்ஸ் துறைகளில் கவனம் செலுத்தப் போவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ஹரித்வாரை சார்ந்த இந்நிறுவனம் தென் இந்தியாவில் தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்காக மெகா புட் வொர்க் உடன் இணைந்து தென் இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்க இருக்கிறது.
பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய நாடு முழுவதும் 150,000 கடைகள் உள்ளன.
பால், துரித உணவுகள், குழந்தை பராமரிப்பு பொருட்கள், இயற்கை அழகு சாதனப் பொருட்கள் ஆகியவை விற்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் அதிக பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் விற்பனை 200 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் 5,000 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.
இப்படியான பத்திரிகை செய்திகள் நிறையவே வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஏழு எடடு ஆண்டுகளுக்கு முன் எல்லோருடைய உண்மையான சொத்து கணக்குகளையும் கருப்பு பண விவகாரங்களையும் வெளிக் கொணர போகிறேன் என்று கூறி போராடிய இவருடைய இன்றைய உண்மையான சொத்து கணக்கு அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக