வெங்கடேஷ் ஆறுமுகம் |
தினசரி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை இவை திறந்திருக்கலாம்! இதனால் அடித்து பிடித்து வாங்கும் அநாவசியக் கூட்டம் குறையும்.
(மெடிக்கல்) மருந்துக் கடைகள் மட்டும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி.
குறிப்பிட்ட நேரம் தவிர மக்கள் வெளியே வந்தால் ₹2000 ஸ்பாட் ஃபைன். முகக்கவசம் இல்லாவிட்டாலும் இதே அபராதம்!
மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்தல் அவர்கள் பணிக்கு இடையூறு செய்தால் ₹5000 ஃபைன்!
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாய ஈபாஸ் தேவை!
வெளி மாநிலத்தில் இருந்து அவசியமின்றி எவரும் மாநிலத்தில் நுழைய கட்டாயத் தடை. தேவையிருப்பின் முறையான ஈபாஸ் & 1 வாரம் குவாரண்டைன் அவசியம்!
நெடுஞ்சாலைகளில் வண்டிகளில் வருபவர்களிடம் உடல் வெப்ப பரிசோதனை செய்யும் குழுக்கள் அமைத்தல்.
பெட்ரோல் பங்குகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கலாம். (காலை 6 மணி முதல் 10 மணி வரை)
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்கலாம்! அத்யாவசியப் பொருட்கள் கொண்டுவரும் வண்டிகளுக்கு டோல் கட்டணம் கிடையாது!
காய்கறி வண்டிகள், பால் வண்டிகள், மருந்துப் பொருட்கள், அத்யாவசியப் பொருட்களுக்கான வண்டிகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் நகருக்குள் செல்லலாம்!
இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி! அதுவும் மார்க்கெட், மருந்து பொருட்கள் வாங்கச் செல்லும் போது மட்டுமே!
அவசரத்தேவைக்கு கார் எடுக்கும் அவசியம் வந்தால் அதை குறிப்பிட்டு காவல் துறைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி காருக்கான அனுமதி எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமே பெறும் வசதி.
வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்!
திறந்திருக்கும் கடைகளில் கட்டாயம் சமூக இடைவெளிக்கான கோடுகள் வரைதல்.
மளிகை, காய்கறிகள், இறைச்சி விற்பனை 10 நாட்களுக்குப் பின்பு டோர் டெலிவரி செய்ய அனுமதித்தல்! (குறிப்பிட்ட நேரம் மட்டும்)
டோர் டெலிவரிக்கு அனுமதி வாங்கியவர்களுக்கு ஸ்டிக்கர் தந்து அவர்கள் ஓட்டும் வண்டியில் ஒட்ட வைக்க வேண்டும்.
எந்தப் பொருட்கள் டோர் டெலிவரி செய்பவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டவர்களாக மட்டுமே பணியில் இருக்கவேண்டும்!
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் டீக்கடைகள்.. மற்ற கடைகள் திறந்திருக்கும் நேரம் வரை திறந்திருக்கலாம்.(முதல் 10 தினங்கள்)
உணவகங்களில் கட்டாயம் பார்சல் மட்டுமே! கடை திறக்காமல் போன் மூலம் ஆர்டர் எடுத்து டெலிவரி செய்ய அனுமதி!
முழு அடைப்பு காலத்தில் வீடு வீடாக வந்து தடுப்பூசி போடும் பணியைச் செய்யவேண்டும்!
போன் செய்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ரேஷன் பொருட்கள் வீடு தேடி டெலிவரி!
கேஸ் சிலிண்டர்கள் வாரத்தில் இரு தினங்கள் டெலிவரி செய்ய அனுமதி! இவர்களும் தடுப்பூசி போட்டவர்களாக இருப்பது அவசியம்!
இறப்பு கணக்குகளை சொல்வதை விட தேவையான கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை டிவி, ரேடியோ & இணையத்தில் தொடர்ந்து செய்வது!
தினமும் மாவட்ட செய்திகள் போல அந்தந்த மாவட்ட நிலையை இதே மீடியாக்கள் வழியே செய்வது!
மழை காற்று போன்ற இடர்களால் மரம் விழுவது, மின் இணைப்புகள், தொலை பேசி, இண்டர்நெட் கேபிள்கள், துண்டிக்கப்பட்டால் விரைந்து சரி செய்ய தனிக்குழுக்கள் அமைத்தல்.
மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டும் அரசுப் பேருந்துகளை இயக்கலாம்!கட்டணம் ஏதுமில்லை!
மாநகராட்சியே அன்றாடம் காய்கறிகள், இலவச கபசுர நீர் மாத்திரை மருந்துகளை வீடு வீடாக வந்து விநியோகிக்கலாம்! (கடந்த முறை இது நடைமுறையில் இருந்தது)
தடுப்பூசி போட்ட பணியாளர்களை வெளியே வர முன்னுரிமை அளித்தல்.
அரசு சம்பந்தமான அனைத்து தேவைகளையும் இணைய வழியில் இயக்குவது!
கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டுத்தலங்கள் கட்டாயமாக மூடி இருப்பது அவசியம்!
எந்த கோவில் திருவிழா ஊர் விழாக்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள், நடத்த கண்டிப்பாக அனுமதி இல்லை!
மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை!
மாநிலத்திற்குள் அத்யாவசியமான பொருட்களை மட்டும் கூரியரில் அனுப்ப அனுமதி! கூரியர் சேவை மட்டும் தினமும் 3 மணி நேர அனுமதி!
லாக்டவுன் காலத்தில் திருமணங்களுக்கு நிச்சயம் அனுமதி இல்லை!
இக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கு சவ ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை! ஆனால் இறுதி காரியங்கள் செய்ய இலவச ஆம்புலன்ஸ் மற்றும் மின் மயானத்தில்/ அல்லது இடுகாட்டில் எரியூட்டுவதை விரைந்து முடிக்க தனிக் குழுக்கள் அமைத்தல்!
அரசின் இந்த திட்டங்களில் அரசின் குறையோ அதிகாரிகளின் குறையோ இருந்தால் அதை வாட்ஸப்பில் (டோல் ஃப்ரீ எண்களில்) புகார் அளிக்கலாம்!
புகார்களை ஆடியோ, வீடியோ, எழுத்து என எந்த வடிவிலும் அனுப்பலாம்! 48 மணி நேரத்தில் அதை விசாரித்து புகார் உண்மையாக இருந்தால் அந்த அதிகாரிக்கு தண்டனை உண்டு!
இந்த செய்திகள் நாளிதழ்கள், டிவிக்களிலும் வரும்! ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனி டோல் எண்கள் தரப்படும்!
அரசின் சார்பில் மாவட்டம் தோறும் மூத்த ஐஏஎஸ் & ஐபிஎஸ் அதிகாரிகள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், அனைத்து கட்சியினர், மனித உரிமை அமைப்பினர், நுகர்வோர் அமைப்பு, மூத்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்!
இது கண் துடைப்பு குழுவாக இருக்காது! நிச்சயம் மக்கள் துயர் துடைக்கும் குழுவாக செயல்படும் அவர்கள் அந்தந்த மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பலாம். அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்!
இனி நீங்க சொல்லலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக