வியாழன், 29 ஏப்ரல், 2021

Tamil Nadu Exit Polls 2021 Live: வெளியானது பரபரப்பான எக்ஸிட் போல் முடிவுகள்!

/tamil.samayam.com : ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளைக் கைப்பற்றும். அதிமுக கூட்டணி 58 முதல் 68 தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 0 முதல் 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அமமுக 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும். மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொல்லிமலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 21ஆம் தேதி ஜெயலலிதாவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வள்ளலார் குடிலில், ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார். முழு செய்தியை
* தேர்தலுக்கு முன்பு டைம்ஸ் நவ் - சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும். அதிமுக - பாஜக கூட்டணிக்கு 49 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்தது. மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
* திமுக ஆட்சி உறுதி என பல்வேறு தரப்பு தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை உத்தேச பட்டியலை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவிற்கு நிதித்துறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. !

* திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்(25), விசிக(6), சிபிஐ(6), சிபிஎம்(6), மதிமுக(6), ஐயூஎம்எல்(3), கொ.ம.தே.க(3), மமக(2), பார்வர்ட் பிளாக்(1), தமிழர் வாழ்வுரிமை கட்சி(1), மக்கள் விடுதலை கட்சி(1), ஆதி தமிழர் பேரவை(1) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

* நடப்பு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக(23), பாஜக(20), தமாகா(6), பெருந்தலைவர் மக்கள் கட்சி(1), தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்(1), புரட்சி பாரதம்(1), மூவேந்தர் முன்னேற்ற கழகம்(1), மூவேந்தர் முன்னணி கழகம்(1), பசும்பொன் தேசிய கழகம்(1) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக மட்டும் 179 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

* கடந்த 2016 தேர்தலை போலவே இம்முறையும் அமைச்சர்களின் தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் ஆகியோரின் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்பட்டன.


* முந்தைய தேர்தல்களைப் போலவே நடப்பு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, திமுக இடையிலான நேரடி போட்டியாகவே களம் அமைந்திருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தனர். அவர்கள் தற்போது இல்லாத சூழலில் புதிய தலைமைக்கான தேடலாகவே 2021 தேர்தல் களம் அமைந்திருக்கிறது.

* கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 136 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. திமுகவிற்கு 89 இடங்களும், காங்கிரஸிற்கு 8 இடங்களும் கிடைத்தன

கருத்துகள் இல்லை: