Anbe Selva : வட இந்தியா ஏன் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது?? //மிக முக்கியமான பார்வை.. கட்டாயம் படிக்கவும்...
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த உயிர்கள்,
உத்தரபிரதேசத்தில் திறந்தவெளியில் எரியும் உடல்கள்,
மத்தியபிரதேச ஆம்புலன்ஸ், குஜராத்தில் உருகும் மின்மயானம்,
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சமீப நாட்களில் மண்டையை குடைவது இதுதான்.
பிரிட்டிஷ் வெளியேறிய பிறகு வட இந்திய சமூகம் முழுமையாக தேங்கிப் போய் இருக்கிறது,
கெட்டி தட்டிப் போன சனாதன தர்மத்திற்குள் தளர்வை ஏற்படுத்தும் எந்த விதமான சிந்தனைப் போக்கும் அங்கே வளரவில்லை.
அப்படியே தென்னிந்திய வந்தால் இன்றைய ஆந்திர கர்நாடக கேரளாவை உள்ளடக்கிய அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கியது,
சமூக பொருளாதார பண்பாட்டுத்தளத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்க்கும் சிந்தனை மரபு அன்றைய மெட்ராஸ் மாகாணத்திலேயே துவங்கிவிடுகிறது..
ஒரு சமூகத்திடம் குவிந்து கிடந்த அதிகாரத்தை இயன்றவரை அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு அதிகாரப் பரவலை இந்த இயக்கமே கோரியது, இந்த சிந்தனைப் போக்கு தான் தென்னிந்தியாவை வட இந்தியாவில் இருந்து விலகி ஒரு நவீன சமூகமாக வளர்த்து வருகிறது.
இடையில் சரிவுகளும் ஊடுருவலும் தோல்விகளும் உண்டு என்றாலும் நரேந்திர மோடி சொன்னவுடன் பித்தளை பாத்திரங்களை எடுத்துக்கொண்டு தெருக்களுக்கு யாரும் ஓடவில்லை,
கொரனோ வந்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகும் நேற்று மத்திய பிரதேசத்தில் தீப்பந்தங்களை தூக்கிக்கொண்டு மக்கள் ஓடியது போல் தென்னிந்தியாவில் எந்த நிகழ்வும் நடப்பதில்லை,
ஐசியூவில் இருக்கும் ஒரு பேசன்டிடம் வந்து பாஜக துண்டை போட்டுக்கொண்டு ஒருவர் கோமியத்தை கொடுத்துவிட முடியாது இங்கே..
சமூக பண்பாட்டு பொருளாதார தளத்தில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை பார்ப்பனிய சுரண்டலை கேள்வி கேட்கும் எண்ணம் வளராத வட இந்தியா சமூகம் அழுகி விழுவது கொரனோ போன்ற ஒரு பேரிடரின் போது வெளிப்படையாக தெரிகிறது..
எல்லா தவறுகளுக்கும் முந்தைய காங்கிரஸ் அரசை காரணம் காட்டி தப்பித்துக் கொள்வது பாரதிய ஜனதாவின் வழக்கம்,
இன்றைக்கு 30 வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருக்கும் பார்ப்பன சமூகம் இதற்கு முன்பு காங்கிரசில்தான் இருந்தது..
அவன் கலரை மாற்றி மாற்றி கட்சியை காட்டி தப்பித்துக் கொண்டே செல்கிறான். பார்ப்பனியத்தை நிறுத்தி கேள்வி எழுப்பாமல் வட இந்திய சமூகம் வளர்ச்சி அடைய முடியாது என்பதுதான் தென்னிந்தியா அவர்களுக்கு சொல்லும் செய்தி..
Anbe Selva
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக