செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஆக்சிஜன் தயாரிப்பை ஆதரிக்கவும் வேண்டும் கண்காணிக்கவும் வேண்டும் தேவை ஏற்படின் போராடவும் வேண்டும்

செல்லபுரம் வள்ளியம்ம்மை  :இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது உலகம் அறிந்த  பிரச்சனை ஆகிவிட்டது .
இன்றைய நிலையில் இருக்கும் எந்த வசதியையும் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க முயல்வது புரிந்து கொள்ளக்கூடியதே.
மருத்துவ பாவனைக்காக அல்லது இதர தொழில்துறைக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பும் கூட அளவு கணக்கில்லாமல் தட்டுப்பாடான ஒரு சூழ்நிலைதான் உள்ளது.
வழக்கமாக தொழில்துறைக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவ தயாரிப்பு ஆக்சிஜனையே அதிக அளவு தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேதாந்தாவின் முன்னே தற்போது ஆக்சிஜன் நிறுத்தப்பட்டிருக்கிறது.
வேதாந்தவால் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அவை மருத்துவ தேவைக்கு அதிக அளவில் பயன்படாது என்றாலும் கூட அதன் தேவை இன்று ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டிருக்கிறது என்பதுவும் உண்மைதான்
இப்போது மத்தியில் ஒரு கொடூர சர்வாதிகார அரசு ஆட்சியில் இருக்கிறது.
அதன் கைப்பாவை என்றாகிவிட்ட உச்ச நீதிமன்றமே ஆக்சிஜன் சிலிண்டரை கடத்துபவர்களை தூக்கில் போடுங்கள் என்று ஒரு கூறியது எவ்வளவு பயங்கரவாத வார்த்தைகள்?
இந்த வார்த்தைகளின் பின்னணி என்பது வெறும் ஆக்சிஜன் தேவையினால் மட்டுமே கூறப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை .
கொரோனா பிரச்சனை தங்களை காவு கொள்ளகூடிய அளவு தலைக்கு மேலே போய்விட்டது என்பது அவர்களுக்கு புரியத்தொடங்கிவிட்டது .
அதனால்தான் இந்த பதற்றம்
இந்த நிலையையே வேதாந்தா அகர்வால் மார்வாடிகள் நன்றாக புரிந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கிறார்கள்  என்றே கருதுகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் வேதாந்தாவின் சூழல் அழிவுக்கு எதிராக என்பதை திரிபு படுத்தி,
தமிழர்களின் வடஇந்தியாவின் ஆக்சிஜன் தேவைக்கு எதிரான  ஒரு மனோநிலையில் உள்ளார்கள்  என்பது போல காட்டுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த தரவுகளின் பின்னணியில் இருந்துதான் வேதாந்தாவுக்கு வழங்கப்பட்ட நான்கு மாத ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியை நோக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இந்த விதத்தில் சர்வகட்சி கூட்டத்தினர் எடுத்த முடிவு சரியானதாகவே எனக்கு படுகிறது.
திமுக தலைவர் திரு ஸ்டாலின் கூறியவாறு கண்டிப்பாக ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க வேதாந்தாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதை தமிழக மக்கள் முழு மனதோடு ஆதரிக்கவேண்டும் கூடவே கண்காணிக்கவும்  வேண்டும்
ஒருவேளை வேதாந்தா குழுமம் இந்த நிபந்தனையை மீறினால் அவர்களை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் திமுகவோடும் இதர கட்சிகளோடும் சேர்ந்து போராடவேண்டும்
தேவை ஏற்பட்டால் அந்த போராட்டத்தை வேதாந்தாவின் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ள வேண்டும் அவர்கள்தான் உலகம் முழுவதும் பரந்து கடை விரித்திருக்கிறார்களே?           
 

கருத்துகள் இல்லை: