இதையடுத்து சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளிடம் இந்தோனீசியா உதவி ேகட்டது.
உடனே, ‘எம்வி சுவிஃப்ட் ரிஸ்கியூ’ எனும் நீர்மூழ்கி மீட்புக் கப்பலை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது.
இந்தக் கப்பல் நேற்று விடியற்காலை பாலித் தீவை வந்தடைந்தது.
இதற்கிடையே நேற்று காலை தொலைக்காட்சியில் உரையாற்றிய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, “இந்தத் துயரச் சம்பவம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது,” என்றார்.
“நீழ்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். கப்பலில் இருந்த அனைவரும் இந்நாட்டின் மகன்கள். நாட்டின் இறையாண்மையைக் காத்த சிறந்த தேசப்பற்றாளர்கள்,” என்றும் அவர் கூறினார்.
“நாம் அனைவரும் அவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொறுமை, துணிச்சல் மற்றும் வலிமையை வழங்க பிரார்த்திப்போம்,” என்று அதிபர் ஜோக்கோ விடோடோ சொன்னார்.
‘கேஆர்ஐ நங்காலா’ நீர்மூழ்கிக் கப்பலை 850 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்,” என்று சனிக்கிழமை பேசிய இந்தோனீசிய கடற்படைத் தளபதி அட்மிரல் யூடோ மர்கோனோ கூறியிருந்தார்.
நீர்மூழ்கிக் கப்பல் தாங்கக்கூடிய 500 மீட்டர் ஆழத்திற்கு மேல் மூழ்கியிருப்பதால் அது நீர் அழுத்தத்தால் நசுக்கப்பட்டு விரிசல் அைடந்திருக்கலாம். இதுபோன்ற ஆழத்திலிருந்து கப்பலை மீட்பது சிரமம் என்று அவர் தெரிவித்தார்.
பாலித் தீவூக்கு அருகே நீரில் மூழ்கி, தாக்கி அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டபோது நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது.
ஜெர்மனில் கட்டப்பட்ட 44 ஆண்டு பழமையான நீழ்மூழ்கிக் கப்பலில் 72 மணி நேரத்திற்கு மட்டுமே தேவையான பிராணவாயு இருந்தது.
சனிக்கிழமை காலையில் அது தீர்ந்திருக்கலாம் என நம்பப்படு கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக