சாய் லட்சுமிகாந்த் :1996இல் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 60+%. இந்த முறையும் 50-55% வாங்கும். ஓட்டு சதவிகிதமும் 2021 தேர்தலை போல 70%க்கு கீழ். ஆனால் 1996ஐ போல் இத்தனை முனை போட்டி இல்லை. திமுக 1996 போல ஒரு மெகா கூட்டணி வைத்தாலும் 1996 (176) இடங்கள் போல அதிக இடங்களில் நின்றுள்ளது.
அப்போது ஜெயலலிதா மீது வெறுப்பிருந்தாலும் அதிமுக விசுவாசிகள் ஜெவிற்கு ஓட்டு போட்டனர்.
இருந்தும் அதிமுக 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.
இன்றும் அதிமுக வில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை. எடப்பாடியை ஒரு மனிதனாக கூட அதிமுகவினர் பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.
கொங்கு பகுதியில் கூட இந்த முறை அதிமுக washout தான்..
ஆகவே தான் சொல்கிறேன் 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும்.. வாக்கு வித்தியாசம் - குறைந்தபட்சம் 5000 ஒட்டுகள் இருக்கும்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லக்கூடிய தொகுதிகள்
1. சேப்பாக்கம் . 2. ஒட்டன்சத்திரம் . 3. திருவாரூர்! மே 2ம் தேதி சந்திப்போம்.
minnambalam :மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் எட்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 29) மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில்... சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிறகான வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன...
சி ஓட்டர்ஸ்
சி வோட்டர்ஸ் நிறுவனம் கடந்த 2016, ஆம் ஆண்டு கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகள் தேர்தல் முடிவுகளோடு சரியாக பொருந்தின.
இந்த முறை சி ஓட்டர்ஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்பில்...
திமுக கூட்டணி 166
அதிமுக கூட்டணி 64
மற்ற கட்சிகள் 4
இடங்களையும் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி- சி.என்.எக்ஸ்.
பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு பெயர் பெற்ற அர்னாப் கோஸ்வாமி தலைமையிலான ரிபப்ளிக் டிவி நடத்திய எக்ஸிட் போல் கணிப்பு
திமுக கூட்டணி 160 -170
அதிமுக கூட்டணி 58- 68
மக்கள் நீதி மய்யம் 2
அமமுக கூட்டணி 4-6
கட்சி வாரியாக
திமுக 137- 147
காங்கிரஸ் 13 -17
அதிமுக 49 -59
பாஜக 2-4
பாமக 5-7
மக்கள் நீதி மய்யம் 2
அமமுக 4-6
மற்றவர்கள் 6- 10
பி-மார்க்
அதிமுக கூட்டணி 40-65
திமுக கூட்டணி 165-190
அமமுக கூட்டணி 1-3
இந்தியா டுடே
திமுக கூட்டணி 175-195
அதிமுக கூட்டணி 38-54
மற்றவை 2
இவ்வாறு முக்கிய நிறுவனங்களின் எக்ஸிட் போல் கணிப்பில் தமிழ்நாட்டில் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக