புதியதலைமுறை செய்திகள் :: கர்நாடக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலாரில் உள்ள எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இரவு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக சிகிச்சை கிடைக்காமல் 8 பேர் இறந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் இணைப்பு பிரிவு அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக