ஐபிசி :தமிழக இலங்கை மக்களுக்கு ஓர் நல்ல செய்தி. காங்கேசன் துறை காரைக்குடி பயணிகள் கப்பல் சேவை .விரைவில் ஆரம்பம் யாழ்பாணம் . காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் காரைக்குடிக்கான படகுச்சேவை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆளுநர் மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் ஆகியோரது இணைத்தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர்,காங்கேசன்துறை துறைமுகத்தை மீள் நிர்மாணம் செய்து, அங்கிருந்து தமிழகத்தின் காரைக்குடிவரை படகு சேவையை ஏற்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. துறைமுகப்பகுதியில் உள்ள அணைக்கட்டு அண்மையில் ஏற்பட்ட சூறாவழி காரணமாக சேதமடைந்துள்ளது.
இதனை பாதுகாப்பதற்கு அவசரமாக கருங்கற்கள் தேவையாகவுள்ளது. இதனை வடக்கின் வேறு இடங்களில் எடுப்பது சிரம்ம் என்பதால் வவுனியாவில் இருந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்றுமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா அரச அதிபர் மற்றும் யாழ், அரச அதிபரும் இணைந்து சுரங்கப் பணியகத்துடனும் கலந்துரையாடி, முரண்பாடுகள் இல்லாதவகையில் விரைவாக அதனை வழங்குவதற்கு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறு பணித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக