வெள்ளி, 25 டிசம்பர், 2020

சுதாகரன் விடுதலையைத் தடுக்கும் சசிகலா .. சுதாகரனுக்கும் சசிக்கும் என்னதான் பிரச்சனை? பழைய கொடுக்கல் வாங்கல் ?

minnambalam : ெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சுதாகரன் விடுதலையை சசிகலா தடுத்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சுதாகரன் விடுதலையைத் தடுக்கிறாரா சசிகலா:  சிறைக்குள் நடப்பது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வழக்கு நடந்த காலங்களில் சுதாகரன், ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்த நாட்களை கழித்தால் அவர் இந்நேரம் விடுதலையாகி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு நீதிமன்றம் விதித்துள்ள பத்துகோடி ரூபாய் அபராதத் தொகையை இதுவரையில் செலுத்தாமல் சசிகலா தரப்பு காலதாமதம் செய்துவருவதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறை வட்டாரங்களில்.

இதுவரை சசிகலா, இளவரசி இருவருக்கு மட்டுமே அபராதத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. சுதாகரனுக்குச் செலுத்தவில்லை. சுதாகரனுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அபராதத் தொகையைச் செலுத்த முயன்றபோதும், அதற்கு சசிகலா தரப்பு தடைபோட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

காரணம் சசிகலா, இளவரசி மீது சுதாகரன் அதிருப்தியில் இருந்து வருகிறார். சசிகலாவை பார்க்கும்போது கூட அவரிடம் சரியாக பேசுவதில்லையாம். அதனால், சுதாகரன் முன்கூட்டியே விடுதலையானால் தங்களுக்கு எதிராக பேசுவார், கொஞ்சம் தாமதமாகட்டும் என்ற எண்ணத்தில் சசிகலா இருப்பதாகச் சொல்கிறார்கள். சிறைக்குள் என்னதான் நடக்கிறது என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

“கர்நாடக சிறை விதிகளின்படி ஒரு கைதியைப் பார்க்க நான்கு பேருக்குத்தான் அனுமதி. மாதத்தில் இரண்டு முறை சந்திக்கலாம். சசிகலா முக்கிய பிரமுகர் என்பதால் கூடுதலாக ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஐந்து பேர் சந்தித்து வருகிறார்கள். சுதாகரன் சிறைக்கு வந்தபிறகு அவரை அதிகபட்சமாக மூன்று முறை மூன்று பேர்தான் சந்தித்திருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டு சுதாகரனின் மனைவியும் நடிகர் சிவாஜியின் மகள் வழி பேத்தியுமான சத்தியவதி ஒருமுறை வந்தார். அவர் சசிகலாவை பார்த்து வணக்கம் வைத்துவிட்டு, சுதாகரனுடன் தனியாக 30 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது இளவரசி, சசிகலாவிடம் சுதாகரன் பேசவில்லை.

அதன் பிறகு சுதாகரனுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் வந்தார். அப்போதுகூட சசிகலா, இளவரசி இருவரையும் பார்க்காமல் ஒரு ஓரத்தில் போய் நண்பரைச் சந்தித்துப் பேசிவிட்டு போனார் சுதாகரன். அதன்பிறகு இளவரசியைப் பார்க்க வந்தவர்கள் சுதாகரனை பார்த்துவிட்டுப் போனார்கள். கடந்த நான்கு வருடங்களில் சுதாகரனை சந்தித்தவர்கள் எண்ணிக்கை இவ்வளவுதான்” என்றார்கள் விவரமாக.

சிறையில் சுதாகரனைத் தொடர்ந்து பார்த்ததாக மனு எழுதப்பட்டுள்ளதே என்று நாம் கேட்க, “மனு மட்டும்தான் சுதாகரன் பெயரில் போடுவார்கள். ஆனால், அனைவரும் சசிகலாவைத்தான் பார்ப்பார்கள். சிறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் சுமார் 150 சதுர அடியுள்ள அறை உள்ளது. அதில் ஒரு பெஞ்சு, ஒன்பது பேர் அமரக்கூடிய இருக்கைகள் போடப்பட்டிருக்கும். சசிகலாவைப் பார்க்க ஐந்து பேர் மனு போட்டு வருவார்கள். சுதாகரன் விசிட்டர்ஸ் என்று ஐந்து பேர் உள்ளே வருபவர்கள். மொத்தம் பத்துபேர் சசிகலாவைத்தான் பார்ப்பார்கள்.

இளவரசியை சந்திக்க விவேக், கிருஷ்ணப் பிரியா குடும்பத்தினர் நான்கு பேர் வருவார்கள். சசிகலாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு இளவரசியிடம் 40 நிமிடங்கள் பேசிவிட்டு வெளியில் போய்விடுவார்கள். விவேக் மட்டும் சசிகலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இளவரசியிடம் போய்விடுவார். தினகரன் மட்டும்தான் சசிகலாவிடம் 10 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரையில் பேசியுள்ளார்.

சந்திக்க வரும் நெருக்கமானவர்களிடம், அடுத்த முறை வரும்போது கிவி பழம், கோதுமை பிரட் மட்டும் வாங்கி வாங்க என்று சொல்லி சாப்பிட்டு வருகிறார் சசிகலா என்றார்கள் சிறைத் துறை வட்டாரங்களில்.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை: