அதே நேரத்தில் அவரது பலவீனமும் அவருக்கு தெரியும். தான் ஒரு திறமையான நடிகன் இல்லை என்பதை அவர் உணர்ந்து இருந்தார் அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது தனது ரசிகர்களை அனுப்பி கேலி செய்வது ... மற்ற போஸ்டர்கள் மீது சாணி வீச செய்வது .
தன் படங்களுக்கு முன் கூட்டியே டிக்கெட் வாங்கி தந்து ரசிகர்களை கைதட்ட செய்வது ஆகிய அனைத்தும் செய்வார். கதைகளில் உருக்கமான சீன்கள் இருந்தால் தன்னால் நடிக்க முடியாது என்று கதாசிரியருக்கு தெரியமாலே சீன்களை மாற்றிவிடுவார். கதாசிரியர்களிடம் சொல்லும் போது நீங்கள் எழுதியதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பார். ஒவ்வொரு படத்திலும் தன்னை புகழ்ந்து பாடலை எழுதுவதை விரும்புவார் . அத்தகைய பாடல்களுக்குதான் முதலிடம் தருவார். இந்த வகையில் அவரது திறமையை மெச்சுகிறேன். ஜனங்களை எதிலே மயங்க வைப்பது எப்படி நீண்ட நாள் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பது என்பதெல்லாம் அவருக்குதெரியும். சிலரை பலகாலம் ஏமாற்றலாம் பலரை சிலகாலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற முடியாது என்றொரு பழமொழி உண்டு. அந்த பழமொழியை பொய்யாக்கியவர் எம்ஜியார்.
திட்டமிட்டு வேலை செய்தால் எல்லோரையும் நீண்ட காலத்துக்கு ஏமாற்ற முடியும் என்பதற்கு எம்ஜியார் உதாரணம்.
1960 இல் கட்சியில் தகராறு வந்தபோது நடிகர்களுக்கு பெரிய மரியாதை தருவது தலை வேதனையாக முடியும் என்று எழுதி இருக்கிறேன் .
பாவமன்னிப்பு என்றொரு கற்பனை சித்திரமும் தீட்டிஇருக்கிறேன்.
திருவொற்றியூர் காவலர் கூட்டத்தில் சமரசம் ஏற்பட்ட பிறகு அறிஞர் அண்ணா என் வீட்டிற்கு வந்திருந்தார்.
அவரிடம் நான் ., கட்சியில் நாம் எல்லாம் பணத்தை இழந்து கஷ்டப்பட்டுவேலை செய்கிறோம்,
அழுக்கு படாமல் அலங்கார பொம்மை போல காட்சி அளிக்கும் நடிகர்கள் உற்சவ மூர்த்திகள் ஆகிவிடுகிறார்கள்
தொண்டர்களும் எங்களை எல்லாம் ஏறிமிதித்து கொண்டு அவர்களை தொட்டு பார்க்க போய்விடுகிறார்கள் . இதை எப்படி அண்ணா தாங்கி கொள்வது என்று கேட்டேன்
அவர் சொன்னார் :
இந்தா கண்ணதாசா , எம்ஜியாரை கட்சிக்குள் இழுத்தது கருணாநிதி , அவரை மக்கள் திலகம் புரட்சி வீரர் என்றெல்லாம் அழைத்து நீங்கள்தான்
இப்போது அவருக்கு கட்சியில் உள்ள செல்வாக்கெலாம் உங்களால் வந்த வினைதான்.
இனி நான் எதை காரணம் காட்டி கட்சிக்கு அவர் வேண்டாம் என்று சொல்லமுடியும் ? எதாவது வழியிருந்தால் சொல்லு ..
அவர் சொன்னது சரிதான்.
மனதறிய ஒருவன் தவறானவன் என்று தெரிந்த பின்பும் அவனுக்கு என்று சேர்ந்துவிட்ட கூட்டத்திற்காக அவனை செயற்கையாக புகழ்ந்தது தவறுதான்.
அந்த பாவத்திற்கு நாங்கள் தண்டனை அடைந்து கொண்டிருக்கிறோம்
எப்படியோ எம்ஜியாரின் ஜாதகம் அசுரர் ஜாதகமாவதற்கு நானும் கருணாநிதியும் பிரக்ஞா இல்லாமலே ஒத்துழைத்து விட்டோம்.
இப்போது நாங்கள் எம்ஜியார் மீது என்ன குற்றம் கூறினாலும் ஜனங்கள் அதை யோசித்துதான் நம்புவார்கள்.
இன்றைய உணர்ச்சியில் நாங்கள் உண்மையை சொன்னாலும் அவை எங்களுக்கு எதிராகத்தான் நிற்கின்றன.
தேறாமல் தேர்ந்த சிறுமைக்காக வருந்துகிறோம்.
ஆனால் இன்று நாங்கள் சொல்வதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்து காலம் கடந்தாவது உண்மையை புரிந்துகொள்வார்கள் .
எங்களுக்கே காலம் கடந்து கண் திறக்கும் போது அப்பாவி ஜனங்களுக்கு அதிக காலம் கடந்து ஞானம் பிறப்பதில் தவறில்லை.
முதலில் நாங்கள் எங்கள் வாக்கு மூலங்களை முடித்து விடுகிறோம்.
தீர்ப்பை ஜனங்களுக்கு விட்டு விடுகிறோம்.
இனிமேல் எழுதும் தீர்ப்பாவது நல்ல தீர்ப்பாக இருக்கவேண்டும் அல்லவா?
ஞான புருஷனும் வேதநாயகனும்
பிற கட்சிகளில் இருந்து எம்ஜியார் கட்சிக்கு போக விரும்புபவர்கள் என் கடிதத்தை படித்த பின்பு போகுமாறு கேட்டு கொள்கிறேன்.
நான் சொன்னது பொய்யா உண்மையா என்பதை பின்னால் கண்டுகொள்ள இது வாய்ப்பாக இருக்கும் .
எம்ஜியார் கட்சியில் நீங்கள் சேர்ந்தால் அன்று உங்களை கட்டி தழுவி வரவேற்பார் . செயற்கையாக ஒரு சிரிப்பு சிரிப்பார்.
பிறகு உங்களை தெரு த்திண்ணையில் உட்கார வைத்துவிடுவார்.
உங்கள் கடந்த கால சேவை பெருமை உங்கள் சுய மரியாதையை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார் .
காரணம் அவர் காமராஜரை போலவோ கருணாநிதியை போலவோ அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் அல்ல
அந்த பாரம்பரியம் உள்ளவர்களிடம்தான் அந்த பெருந்தன்மை இருக்கும்.
இவர் மேக்கப் ரூமில் இருந்து ஒடி வந்தவர் .. அன்றும் இன்றும் பார்க்கிறேன்.
அவரை ஸ்டுடியோவிலோ ஆபீஸிலோ பார்க்க போகிறவர்கள் வாயும் வயிறும் காய வெளித்திண்ணையிலேயே காத்து கிடக்கிறார்கள்.
பி டி சரஸ்வதி ஒருவர்தான் அவரை நினைத்த நேரமெல்லாம் பார்க்க முடிகிறது.
முடியுமானால் நீங்களும் ஒரு புடவையை வாங்கி கட்டி கொண்டு போய் பாருங்கள் .
சரியான நேரத்தில் அவருக்கு கைகொடுத்த மதியழகனையே தெருவில் உட்கார வைத்துவிட்டார்.
அது மட்டுமா ? அவரது ட்ரைவரை அனுப்பு என் எதிரில் மதியழகன் சிகரெட் பிடிக்க கூடாது என்று சொல்லு என்று சொல்ல சொன்னார் .
அவரது அலுவலகத்தில் ஸ்டாண்ட் நடிகர்களோடு எம் எல் ஏக்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
நீங்கள் யார் வீட்டிலும் காத்து கிடக்கலாம் அவர்கள் உங்களை வீட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவராக இருந்தால்
சத்திய ஸ்டுடியோவில் காத்து கிடக்கும் நிலைமை உங்களுக்கு தேவைதானா?
எத்தனை ரதிகள் ரம்பைகள் வந்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காமராஜர் பேச மாட்டார்.
கட்சிக்காரர்களைத்தான் சீக்கிரமாக கூப்பிடுவார்.
கட்சிக்காரரை பொறுத்தவரை கருணாநிதியின் கவனிப்பு மிக உயர்வாக இருக்கும் .
அற்பனுக்கு வாழ்வு வந்தால் .... பழமொழிக்கு எம்ஜியார் கண் கண்ட உதாரணம்.
அதோடு அவரது இன உணர்ச்சி உங்களின் கவனத்தில் இருக்கவேண்டிய ஒன்று .
கட்சியில் தனக்கு அடுத்த இடத்தை அவர் வேறு யாருக்கும் தர விரும்பவில்லை .
தன்னுடைய இனத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அதை மனோகரனுக்கு அவர் தந்தார்.
இன்னும் பொருளாளருக்கும் அதே போன்று ஒரு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார்.
இந்த வகையில் இன உணர்ச்சி இல்லாது அழிந்து போனது தமிழ் சாதி மட்டுமே.
எல்லோர் மீதும் ஊழல் ஊழல் என்று குற்றம் சாட்டிய எம்ஜியார் மனோகரன் மீது அந்த குற்றசாட்டை சுமத்தியதில்லை.
இன்று மனோகரனுக்கு உள்ள வசதிகள் என்னென்ன?
தமிழ்நாட்டிலேயே " ஊழல் சக்கரவர்த்தி " என்ற பட்டம் அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்.
பல லட்ச்ச ரூபாய் செலவில் அண்ணா நகரில் அவர் கட்டி உள்ளதாக சொல்லப்படும் வீடு எந்த சம்பாத்தியத்தில் வந்தது ?
அவரது மூதாதையர் தேங்காய் உரித்து சம்பாதித்ததா?
இல்லை திருவனந்தபுரத்தில் வேறு எதாவது தொழில் நடத்தினார்களா?
அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற தொழில் மட்டுமே பரபரப்பாகவும் பளபளப்பாகவும் நடைபெற்றது .
இதை விசாரிக்கும்படி எம்ஜியாரிடம் சொல்லுங்களேன்.
அவர்தான் எதை எடுத்தாலும் நீதிபதியை அழைத்து விசாரணை செய்வார் இதையும் விசாரணை செய்யட்டுமே
எம்ஜியார் என்னும் ஞான புருஷனுக்கு மனோகரன்தான் வேதநாயகன்.
பதினெட்டு செயலாளர்கள் முன்னூறு பொதுக்குழு உறுப்பினர்கள் என்று பட்டியல் போட்டாரே எம்ஜியார் . யாரையாவது கேட்டாரா?
கட்சி கொள்கை அறிவிப்பு வெளியிடும்போது மனோகரனை தவிர வேறுயாராவது கலந்து கொண்டார்களா?
சுய மரியாதையை உள்ள பலர் இவரது கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள்.
வேளைக்கொரு புடவை கட்டிக்கொண்டு பி டி சரஸ்வதி மட்டும் எம்ஜியாரிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை காட்டி கொண்டிருக்கிறார்.
கட்சியின் மகளிர் அணிக்கு நல்ல புதுமுகங்களை எல்லாம் அவர் கொண்டு வந்துதிருக்கிறார்.
எம்ஜியாரை மற்ற எல்லாரையும் விட எனக்கு நன்றாக தெரியும் .
என் வசனத்திலோ பாட்டிலோ யாரும் கைவைக்க அஞ்சுவார்கள்.
நான் உயிராக மதிக்கும் என் முதலாளி டி ஆர் எஸ் கூட என்னுடைய எழுத்தில் எதாவது திருத்தம் வேண்டுமென்றால் என்னை கூப்பிட்டு திருத்த சொல்வாரே தவிர சிவப்பு பென்சிலால் கோடு போடமாட்டார்.
ஆனால் எம்ஜியார் தன்விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவார் .. திருத்துவார்.
அவரது ஆணவம் எந்த சக்கரவர்த்திக்கு கிடையாது.
பரிதாபத்துக்கு உரிய தமிழ்ச்சாதி அவருக்கு ஓட்டும் போட்டு ஆட்டமும் போடவைத்துவிட்டது .
கட்சிக்காரனை கண்மணி போல காப்பாற்றுபவர் கருணாநிதி .
கட்சிக்காரனை எப்போதும் கவனத்திலேயே வைத்திருப்பர் காமராஜர்.
இவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு எம்ஜியாரையா தமிழ் சாதி நம்புவது?
தேசம் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை சொல்லுகிறேன்.
தமிழ் பெண்கள் எல்லோருமே தன்மீது காதலுற்று கிடப்பதாக எம்ஜியார் கருதுகிறார்.
அதே விஷயத்தில் அவர் பயங்கரமான மனிதனாகவும் நடந்து கொள்வர்
முதலில் தமிழ் இளைஞர்கள் தங்கள் வீடுகளில் எம்ஜியார் படங்கள் இல்லாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.
அவர் நடிக்கும் படங்களில் விரசமில்லாத காதல் காட்சிகள் உள்ள படங்களை மட்டும் பார்ப்பதற்கு தங்கள் குடும்பங்களை அனுமதிக்க வேண்டும் .
ஆங்கில நடிகர்களும் இந்தி நடிகர்களும் பெரும்பாலும் 40 வயதிற்கு மேல் காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை.
தந்தை வேஷம் போட போய்விடுகிறார்கள்.
தமிழ் இந்தி நடிகைகள் 35 வயதிற்கு மேல் அக்காள் வேடமோ அண்ணி வேடமோ போடப்போகிறார்கள்.
எம்ஜியார் மட்டுமே 67 வயதிலும் 16 வயது பருவ பெண்களோடு கட்டி புரண்டு விளையாடுகிறார்.
சில நடிகைகளின் தாயார்கள் இளமையாக இருந்த போது அவர்களோடு காதல் காட்சிகளில் நடித்தார்.
இப்போது மக்களோடும் காதல் காட்சிகளில் நடிக்கிறார் .
தமிழ் மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி தள்ளாத வயதிலும் துள்ளி விழுகிறார்.
ஒரு சிறப்பும் இல்லாத மனிதன் எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவது குறித்து நான் பொறாமை படவில்லை.
ஆனால் தமிழ் மக்களின் இளிச்சவாய்தனத்தை பார்க்கும் போது எரிச்சல்தான் வருகிறது .... தொடரும்!
முந்தைய பாகம் இந்த இணைப்பில் உள்ளது Kannadhasan MGR - 1 https://namathu.blogspot.com/2020/12/1.html
முந்தைய பாகங்கள் .
எம்ஜியாரின் உள்ளும் புறமும் ( 1 ) .கவிஞர் கண்ணதாசன் . அரங்கமும் அந்தரங்கமும் .
எம்ஜியாரின் உள்ளும் புறமும் (2 ) ...கவிஞர் கண்ணதாசன் நாங்களே தேடிக்கொண்ட வினை
எம்ஜியார் உள்ளும் புறமும் -3 ! கவிஞர் கண்ணதாசன் .. மலையாளிகள் பற்றி
எம்ஜியார் உள்ளும் புறமும்- 4 - கவிஞர் கண்ணதாசன் - பாவம் வெங்கிடசாமி - கோல்டன் நாயுடு !
எம்ஜியார் உள்ளும் புறமும் 5 - கவிஞர் கண்ணதாசன் S .S .ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக