வளையத்திற்குள் வரவேண்டிய பலர் ஆளுந்தரப்பினராகவும் அவர்களுக்கு வேண்டியவர்களாகவும் உள்ளார்கள். அதேசமயம் காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து ரிடையர்டான சித்ராவின் அப்பா காமராஜும் இப்போதும் சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் சித்ராவின் அண்ணனும் சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் அவ்வளவாக அக்கறை காட்டா தது வியப்பாக உள்ளது. சித்ராவின் தாயார் விஜயா மட்டும் தனது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தைக் கிளப்பினார்.
போலீஸ் விசாரணை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, நக்கீரனும் தனது விசாரணையை ஆரம்பித்தது. முதலில் சித்ராவின் பள்ளி பருவத்திலிருந்து இப்போது வரை சினேகிதியாக இருந்த ரேஷல் நம்மிடம் பேசும் போது, ""சித்ரா ரொம்ப போல்டானவ, ஹெல்ப்பிங் மைண்ட் உள்ளவ. சன் டிவியில் ரிலே ஆன "சின்னபாப்பா, பெரிய பாப்பா'’ சீரியலின் டயலாக் ரைட்டரான கார்த்திக்கை காதலிக்க ஆரம்பிச்சு, அவனுக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக் கொடுப்பா. நிச்சயதார்த்தம் வரை வந்த அவர்களின் காதல், ஏனோ கல்யாணத்துக்கு முன்னாடி பிரேக்அப் ஆயிடிச்சி.
அதன்பின் முன்னணி சேனல்களில் காம்பியராகவும் சீரியல் ஆர்ட்டிஸ்டாகவும் வலம் வந்து வேகமாக முன்னேறி வந்தா. திடீர்னு ஒருநாள் ஹேமந்தோட போட்டோவ வாட்ஸ்- அப்ல அனுப்பி, இவன லவ் பண்றேன், ஆள் எப்படி இருக்கான்னு கேட்டா. என்னடி உனக்கு சித்தப்பா மாதிரி இருக்கானேன்னு சொன்னதுக்கு, ஆள் வசதியானவன், திருவேற்காட்ல ஜி.பி.என். பேலஸ்ங்கிற கல்யாண மண்டபம் இருக்குன்னு சொன்னா. அங்கதான் அவங்க நிச்சயதார்த்த மும் நடந்துச்சு. அதன் பின் கொஞ்ச நாள் எங்கிட்ட பேசாம இருந்தவ, திடீர்னு ஒரு நாள், ஹேமந்த் என்னை ரொம்ப சந்தேகப்படுறான், ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கு கூடவே வந்து, ‘சீரியல் டைரக்டர்கிட்ட சண்டை போடுறான். அவனச் சுத்தி எப்பவுமே ஒரு டைப்பான கும்பல் இருக்கு. இதப்பத்தி பேசணும்னு நுங்கம்பாக்கத்துல இருக்கும் ஒரு பப்புக்குக் கூப்பிட்டா.
நானும் ஹேமந்த்திடம் பேசிப் பார்த்தேன், இனி மேல் சீரியலில் சித்ரா நடிக்க கூடாது என்பதைrr சொல்லிக்கிட்டே இருந்தான். சைக்காலஜி யில கோல்ட் மெடலிஸ்டான சித்ரா இப்படி ஒரு முடிவை எடுப்பான்னு நம்பவே முடியல'' என கதறியழுதார் ரேஷல்.
ஹேமந்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்திய சித்ராவின் இன்னொரு தோழியான ரேகா நாயர் நம்மிடம், ""அந்த ஹேமந்த் என்னிடமே ஒருதடவை அப்ரோச் பண்ணிய பொம்பள பொறுக்கி. ஜிபிஎன். பேலசின் உண்மையான உரிமையாளர் திருவேற்காட்டில் இருக்கும் எஸ்.டி.கே. பள்ளியின் தாளாளர் ஜெயச்சந்திரன். ஹேமந்தின் ஃப்ரண்டான அமைச்சர் ஒருவரின் மகனுக்கு சித்ரா மீது ஒரு கண் இருந்தது'' என்கிறார்.
கங்காவாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இன்னொரு தோழியோ, பெசண்ட் நகர், திருவான்மியூரில் லக்ஸரி அப்பார்ட்மெண்ட், காஸ்ட்லியான ஆடி கார்னு சித்ராவின் வளர்ச்சி எல்லாமே பொலிட்டிக்கல் சப்போர்ட்டால் கிடைத்ததுதான். யார்கூட டேட்டிங் போனாலும் என்னிடம் மறைக்காம சொல்வா. சத்தியமா இது கொலைதான். இந்தக் கொலைக்குப் பின்னால் டெபுடியின் ரிலேஷன் நடிகர் ஒருத்தர் தலைமையில் ஒரு கூட்டமே இருக்கு. அதே போல் அந்த சீரியலில் இவளுக்கு ஜோடியா நடிச்ச குமரனின் டார்ச்சரையும் என்னிடம் சொல்லி அழுதிருக்கா.
இதையெல்லாத்தையும்விட முக்கியமான விஷயம், விஜய் டிவி ரக்ஷன் ("கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மானுடன் செகண்ட் ஹீரோவாக நடித்தவர்) கூட ஒருமுறை டேட்டிங் போன போது, நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து, சித்ராவை மிரட்டியதுடன், ஹேமந்திடமும் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் சித்ராவுக்கு இருந்தது.
ரக்ஷனை நாம் தொடர்பு கொண்டும் இந்த இதழ் அச்சாகும் வரை ரெஸ்பான்ஸ் இல்லை. அவரின் விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம். சினிமா மற்றும் சீரியல் நடிகைகளின் அரசியல் சினேகிதங்களின் முடிவு சில நேரங்களில் இப்படிக்கூட ஆகி விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக