dhinamalar :ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ., இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு
அந்தஸ்து, கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு -
காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக
பிரிக்கப்பட்டன.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், மாவட்ட வளர்ச்சி
கவுன்சிலுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. மொத்தமுள்ள, 20
மாவட்டங்களில், தலா, 14 இடங்கள் என, 280 இடங்களுக்கு தேர்தல்
நடந்தது.இதில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட,
ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து, 'குப்கர் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி'
என்ற பெயரில் போட்டியிட்டன.
ஜம்மு பிராந்தியத்தில், பா.ஜ., 57
இடங்களிலும், எதிர்க்கட்சிகள் கூட்டணி, 37 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
அதே நேரத்தில், காஷ்மீர் பிராந்தியத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணி, 71
இடங்களிலும், பா.ஜ., மூன்று இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.ஒட்டு
மொத்தமாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி, 108 இடங்களிலும், பா.ஜ., 60
இடங்களிலும், காங்கிரஸ், 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.எதிர்க்கட்சி
கூட்டணி, 13 மாவட்டங்களையும், பா.ஜ., ஏழு மாவட்டங்களையும் கைப்பற்றும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவு குறித்து, கருத்து
தெரிவித்துள்ள, ஒமர் அப்துல்லா, ''இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின்
உண்மையான மனநிலையை வெளிப்படுத்திஉள்ளது,'' என்றார்.
''ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி இது,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் கூறி உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக