சனி, 26 டிசம்பர், 2020

ஆதரவாளர்களை மதுரைக்கு அழைக்கும் மு.க.அழகிரி

ஆதரவாளர்களை மதுரைக்கு அழைக்கும் மு.க.அழகிரி

மின்னம்பலம்  தமிழகம் முழுவதுமுள்ள ஆதரவாளர்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி மதுரை வர அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.    திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கலைஞர் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி மீண்டும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். திமுகவிலிருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும், அப்படி வந்தாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றும் அறிவித்தார் அழகிரி.      அத்துடன், ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அரசியலின் அடுத்த நகர்வை அறிவிக்க உள்ளதாகக் கூறினார். அழகிரி உள்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் அது திமுகவுக்கோ, திமுகவின் வாக்கு வங்கிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என திமுக தரப்பிலிருந்து கனிமொழி பதிலளித்தார்.

இந்த நிலையில் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும் என்று அறிவித்தார். 


இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அனைவரும் வரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அண்மையில் பாஜகவில் சேர்ந்த அழகிரி ஆதரவாளராக கருதப்படும் கே.பி.ராமலிங்கம், மு.க.அழகிரியை பாரதிய ஜனதா கட்சியில் இணைப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். அவரை பாஜகவில் இணைப்பதே எனது குறிக்கோள் என்று கூறினார்.

எழில்

கருத்துகள் இல்லை: