Veerakumar -tamil.oneindia.com : சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சீமான். அப்போது, ஜனநாயகம் பேசக்கூடிய நீங்கள் ஒருவர் கட்சி ஆரம்பிக்கும் போது எதிர்ப்பது ஏன் என்ற நிருபரின் கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், ரஜினிகாந்த் திரைப்படத்தை யாரும் குறை சொல்லவில்லையே. 71 வயதில் எதற்காக ஹீரோவாக நடிக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லையே.
அரசியல் என்பதில் எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. பல நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் உள்ளது. ஒரு இனத்தின் பிள்ளைகள் எழுச்சியுற்று எழும் போது, எங்கிருந்தோ வந்து ஒரு திரை கவர்ச்சியை போட்டு மூடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழர் எழுச்சி பெறுவது மிகவும் அரிதான விஷயம். அது இப்போது நடக்கிறது. எங்களை வழி நடத்துவதற்கு எங்களுக்குள் ஒருவர் இல்லையா? இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒருவர் வரவேண்டுமா? மானம், வீரம், அறம் ஆகிய மூன்றும் உயிர் என்று வாழ்ந்த தமிழினத்துக்கு இது ஒரு தன்மான இழப்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட்டுவிட்டு ரஜினிகாந்தை மட்டும் பிடிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களையெல்லாம் விட்டு விட்டதால்தான் இப்போது இவர்களை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது
எம்ஜிஆர் பற்றி பேசினால் அதிமுகவுக்கு லாபம்
ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் எம்ஜிஆரை சுட்டிக்காட்டுகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் சில நடிகர் நடிகைகள் கட்சிகளுக்காக பிரச்சாரம்
செய்வார்கள். இப்போது ரஜினி மற்றும் கமல் இருவரும் அதிமுகவுக்கு பிரச்சாரம்
செய்கிறார்கள். எம்ஜிஆரை பற்றி பேச தொடங்கினால் ஓட்டுகள்
அதிமுகவுக்குத்தான் செல்லும். பிரபாகரனை எம்ஜிஆர் மகன் போல நேசித்தார்.
ஈழத்தை அடைய வேண்டும் என்று எம்ஜிஆர் பெரும் கனவு வைத்திருந்தார். எம்ஜிஆரை
பற்றி பேசுகிறீர்களே ஈழத்தை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்ல
முடியுமா.
எடப்பாடி பழனிச்சாமி தமிழர்
பிரபாகரனை பற்றி, ரஜினியும், கமல்ஹாசனும் மதிப்பீடு சொல்லிவிடுங்கள்
பார்ப்போம். என்னுடைய தாய்மொழி தமிழ், உங்களுடைய தாய் மொழி என்ன என்று
முதலில் சொல்லுங்கள். அவ்வளவு மானங்கெட்ட கூட்டமா நாங்கள்? எடப்பாடி
பழனிச்சாமி தமிழர்தான். அவர் நல்லாட்சி தரவில்லை என்றால், அவருக்கு பதிலாக
நாங்கள் வந்து நல்லாட்சி தந்து விடுகிறோம். இது தந்தை மகன் இடையேயான
பிரச்சனை. மற்றவர்கள் தலையிட கூடாது. எனது தந்தைக்கு ஆங்கிலம் பேச தெரியாது
என்பதற்காக, ஆங்கிலம் பேசுகிறான் வெள்ளையாக இருக்கிறான் என்பதற்காக
எதிர்த்த வீட்டுக்காரனை தகப்பன் என அழைக்க முடியாது.
எடப்பாடி பழனிச்சாமி தமிழர்
பிரபாகரனை பற்றி, ரஜினியும், கமல்ஹாசனும் மதிப்பீடு சொல்லிவிடுங்கள்
பார்ப்போம். என்னுடைய தாய்மொழி தமிழ், உங்களுடைய தாய் மொழி என்ன என்று
முதலில் சொல்லுங்கள். அவ்வளவு மானங்கெட்ட கூட்டமா நாங்கள்? எடப்பாடி
பழனிச்சாமி தமிழர்தான். அவர் நல்லாட்சி தரவில்லை என்றால், அவருக்கு பதிலாக
நாங்கள் வந்து நல்லாட்சி தந்து விடுகிறோம். இது தந்தை மகன் இடையேயான
பிரச்சனை. மற்றவர்கள் தலையிட கூடாது. எனது தந்தைக்கு ஆங்கிலம் பேச தெரியாது
என்பதற்காக, ஆங்கிலம் பேசுகிறான் வெள்ளையாக இருக்கிறான் என்பதற்காக
எதிர்த்த வீட்டுக்காரனை தகப்பன் என அழைக்க முடியாது.
தன்மானம் தடுக்கிறது
அரசியல் செய்யாமல் நேரடியாக தேர்தலை எதிர்கொள்வது என்பது மக்களை மிகவும்
கேவலமாக மதிப்பிடுவதாக பார்க்கிறேன். இது ஒரு தன்மான இழப்பு என்று நான்
பார்க்கிறேன். நீங்கள் எங்களை எப்படித்தான் கருதுகிறீர்கள்? தமிழன் ஒரு
அறிவு இல்லாத கூட்டம், கேடுகெட்ட கூட்டம் என்று நீங்கள் மதிப்பீடு
செய்துள்ளீர்களா? தன்மானம் மிக்க தமிழன் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
எம்ஜிஆர் ஈழத்தை வாங்கித் தர உளமாற விரும்பினார். ஆனால் தமிழகத்திற்கு
நல்லாட்சி தரவில்லை. பல உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எம்ஜிஆர். இவ்வாறு
சீமான் தெரிவித்தார்
விஜய் அரசியல்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறதே என்ற நிருபரின் கேள்விக்கு
இன்னும் ஆவேசமானார் சீமான். அவர் கூறுகையில், ரஜினிகாந்த், கமல்ஹாசனை
அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற
எண்ணம் தோன்றாது என்றார். இது விஜய்க்கும் பொருந்துமா என்ற நிருபரின்
கேள்விக்கு, எல்லோருக்கும் பொருந்தும். நானும் திரையுலகத்தில் இருந்து
வந்துள்ளேன். ஆனால் நான் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வரவில்லை.
சாவுகூட்டத்தில் வெடித்துக் கிளம்பி மக்களை சந்தித்து நான் அரசியலுக்கு
வந்துள்ளேன். அய்யா நல்லகண்ணு பற்றி யாருமே பேச மாட்டேன் என்கிறீர்கள்.
எதையுமே செய்யாமல் நேரடியாக அதிகாரத்துக்கு வர விரும்புபவர்களை மட்டுமே
பேசுகிறார்கள். இவ்வாறு சீமான் ஆவேசமாக தெரிவித்தார். விஜய் மற்றும் கமல்
இருவரும் சீமானுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில்,
சீமானின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக