திங்கள், 23 டிசம்பர், 2019

CAA 14 வயது பெண்ணின் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொன்ற காவல்துறை : மங்களூரில்

#CAA 14 வயது பெண்ணின் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொன்ற காவல்துறை : மங்களூரில் அரச பயங்கரவாதம் ! #CAA 14 வயது பெண்ணின் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொன்ற காவல்துறை : மங்களூரில் அரச பயங்கரவாதம் ! kalaignarseithigal.com : CAA 14 வயது பெண்ணின் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொன்ற காவல்துறை : மங்களூரில் அரச பயங்கரவாதம் ! மங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது அப்பாவி பொதுமக்கள் இருவரை போலிஸார் சுட்டுக் கொன்றது பெரும் கோபத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலும் கடந்த டிச.,19ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, டெல்லி ஜாமியா மற்றும் உத்தர பிரதேசத்தில் நடந்தது போல மங்களூரு போராட்டத்தின் போதும் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது.
இதில், போராட்டத்தில் பங்கேற்காத அப்பாவி பொதுமக்களான ஜலீல் குத்ரோலி மற்றும் நெளஷீன் ஆகிய இருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உறவினர்களைப் பேட்டியெடுக்க வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர் 8 பேரிடமும் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவர்களையும் கைது செய்து வெள்ளிக்கிழமைக்கு பின்பே போலிஸார் விடுவித்தனர்.

இதனையடுத்து மங்களூருவில் டிச.,23ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், போலிஸின் வன்முறை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த கூலித் தொழிலாளியான ஜலீல் குத்ரோலியின் குடும்பத்தினர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில், ஜலீலின் மகள் ஷிஃபானி பேசிய போது, “எங்களை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த போது, என் கண் முன்னே அப்பாவின் இடது கண்ணுக்கு அருகே போலிஸார் துப்பாக்கியால் சுட்டனர்” எனக் கூறியுள்ளார். கூலித் தொழிலாளியான ஜலீல் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பம் தற்போது நிர்கதியாகி விட்டிருக்கிறது.
“டிச.,19 அன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜலீல் பங்கேற்கவே இல்லை. தொடக்கத்தில் 50 முதல் 100 பேர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறையோ ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளது. குறைந்த அளவிலான கூட்டத்தை கூட போலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை” என ஜலீலின் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிகாரத்தை உரிமைக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறையாக செலுத்தும் பா.ஜ.க அரசின் இந்த சர்வாதிகார செயலுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: