செவ்வாய், 24 டிசம்பர், 2019

பெரியாரை அவமான படுத்தி டுவீட்டார் வெளியிட்ட பாஜக நிர்மல்குமார்

அந்த பயம் இருக்கட்டும்! பெரியார் குறித்த டீவீட்டை எதிர்ப்பு வந்ததும்
பாஜகவினர் நீக்கியது பற்றி ஸ்டாலின் கருத்து 
தினகரன் : சென்னை : பெரியார் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கிய பாஜகவின் செயலுக்கு ஸ்டாலின் ட்விட்டரில் கடும் கண்டனம் கூறியுள்ளார்.
பாஜக ட்வீட் 
தந்தை பெரியாரின் 46வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட் ஒன்று பகிரப்பட்டிருந்தது. “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று... குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்” என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.உடனடியாக கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது.

இந்த நிலையில் ட்விட்டர் பதிவு இவ்வாறு நீக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், 'பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது. பாஜக அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: