சனி, 28 டிசம்பர், 2019

நைஜீரியாவில் மீண்டும் தலைகள் துண்டிக்கப்படும் வீடியோ- வெளியிட்டது ஐஎஸ் ஆதரவு அமைப்பு


veerakesari : நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்களை தலையை துண்டித்து படுகொலைசெய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பொன்று அறிவித்துள்ளதுடன் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தங்கள் தலைவர் அபு பக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இதனை செய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பான ஐஎஸ்டபில்யூஏபீ தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களையே தலையைதுண்டித்து படுகொலைசெய்துள்ளாக ஐஎஸ் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் 11 பேர் வரிசையாக நிற்பதை காணமுடிகின்றது. முதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவதையும் பின்னர் ஏனையவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. இதன் பின்னர் அந்த வீடியோவில் தோன்றும் முகமூடியணிந்த நபர் ஒருவர் ஐஎஸ்தலைவர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இவர்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிடுகின்றார்.

 கிறிஸ்மஸினை இலக்காக வைத்தே ஐஎஸ் அமைப்புஇந்த வீடியோவை வெளியிட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படுகொலைகளை நைஜீரிய ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்

கருத்துகள் இல்லை: