வெள்ளி, 11 அக்டோபர், 2019

இந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். ...

Muralidharan Pb : · டிவி சேனல்களில் பேசும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சிலர் என்னவோ சீன இந்திய வர்த்தகம் 1962க்கு போருக்கு பிறகு முடங்கி இருந்ததாகவும் அதைப் பெருக்கிட இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பதாக பீடிகை கொடுப்பது கொஞ்சம் அதிகம்.
இந்திய சாப்ட்வேர் பிஸ்து என்றால், பெரும்பாலான ஹார்ட்வேர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சீனா தான் முதலிடம்.
அமெரிக்கா கொழுத்து போய் சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க, அதே நேரத்தில் அமெரிக்கா இந்தியா மீதும் நிறைய தடைகளை விதித்துள்ளது. அந்த தடையிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள சீனாவிற்கு இந்தியாவும் இந்தியாவுக்கு சீனாவும் பரஸ்பரம் தேவை.
இவ்வளவு தான் விஷயம். இந்திய சீன வர்த்தகம் சென்ற ஆண்டில் (2017-18) சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது கிட்டத்தட்ட 6.25 லட்சம் கோடி ரூபாய். அதை 100 பில்லியனாக ஆக்கிட இரு நாடுகளும் முயல்கிறது. இவ்வளவுதான் தான் செய்தி. எது எப்படியோ, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கென தரமான பொருட்கள் அமெரிக்க தடையால் இனி இந்தியாவிலும் கிடைக்கும். விலை கொஞ்ச கூடலாம்.
'தேச பக்தர்கள்' சில வாரங்களுக்கு முன்பு பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்தியாவை பற்றி பேசாமல் இருக்க, சீனப் பொருளாதாரத்தை நக்கலடித்து கொடுத்த செய்திகளை எல்லாம் அவசர அவரசமாக மறைக்கும் நோக்கில் பேசி வருகின்றனர்.

பொருளாதாரத்தில் அமெரிக்கா எப்படியோ இந்தியாவுக்கு சீனாவும் ஜப்பானும். அதேபோல் இந்தியாவின் சந்தையை எப்படி அமெரிக்கா புறக்கணிக்க முயலுகிறதோ இந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். இதனால் சீனா எந்த சமாதானம் செய்யத் தயராக இருக்கும்.
எப்படியோ பொருளாதார நிலைமை மாறி முன்னேற்றம் வந்தால் எல்லாருக்கும் நல்லது. பொறுத்திருந்து பார்ப்போம். 

கருத்துகள் இல்லை: