வியாழன், 29 ஆகஸ்ட், 2019

காலில் விழும் கலாசாரம் மீண்டும்.... அடிமை பாரம்பரியம் மீண்டும் தொடர்கிறது!

  தினமலர்:  சென்னை: வெளிநாடு புறப்பட்ட, முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், இ.பி.எஸ்., காலில் விழுந்து, ஆசி பெற்றனர். ஜெயலலிதா, முதல்வராக இருந்தவரை, வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றதில்லை. அவர், விழாக்களில் பங்கேற்கும் போதும், வெளியூர் செல்லும் போதும், கட்சியினர், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காலில் விழுவர். அவர் மறைவுக்கு பின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சசிகலா காலில் விழ துவங்கினர். அவர் சிறை சென்ற பின், அ.தி.மு.க.,வில், காலில் விழும் கலாசாரம் ஓய்ந்திருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின், காலில் விழும் கலாசாரம், அக்கட்சியில், மீண்டும் துவங்கி உள்ளது. முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, வெளிநாடு சுற்றுப்பயணம் கிளம்பினார். அவரை வழியனுப்புதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்துடன் திரண்டனர்.அனைவரும் வரிசையாக நின்று, முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர்கள், ரமணா, மூர்த்தி, சண்முகநாதன், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என, அனைவரும் வரிசையாக, முதல்வர் காலை தொட்டு வணங்கினர்; முதல்வரும் தடுக்கவில்லை. ஜெயலலிதாவை சந்திக்கும்போது, பயபக்தியுடன் பணிந்து, பூங்கொத்து வழங்குவது போல், அமைச்சர்கள், நேற்று முதல்வரிடம் பூங்கொத்து கொடுத்தனர்

கருத்துகள் இல்லை: