செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

நாட்டு நாய்களின் உடலில் மைக்குரோ சிப் .. அழிந்து வரும் இனத்தை பாதுகாக்க ...இந்தியாவிலேயே நெல்லையில்தான்


microchip-in-dogs tamilthehindu : இந்தியாவில் முதன்முறையாக திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு இன நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது.படம்: மு. லெட்சுமி அருண் திருநெல்வேலி
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு இன நாய்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடை பெற்றது. நாட்டு இன நாய்க ளான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை மற்றும் ராஜபாளையம் நாய்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத் தில் குளுக்கோஸ், கொழுப்பு, இதயத்தின் செயல்பாடு குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், நாட்டு இன நாய்களின் உடலில் மைக்ரோசிப் (microchip) இலவச மாக பொருத்தப்பட்டது.
ரத்ததானம் பெறலாம் -   முகாமை தொடங்கி வைத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.பாலசந்திரன் கூறியதா வது: இந்தியாவில் முதன்முறை யாக நாட்டு இன நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாய்களை அதன் உரிமையாளர்கள் எளிதில் அடையாளம் காண முடியும். இதற்காக மைக்ரோசிப்களில் தனி எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். மைக்ரோசிப் பொருத்தப்பட்டதும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. நாட்டு இன நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களை அதற்கென வழங்கப்பட்ட எண்ணை வைத்து எளிதாக அடையாளம் காண முடி யும். மேலும் மைக்ரோசிப் பொருத்து வதால் அந்த நாய் யுனிவர்செல் டோனர் பட்டியலில் சேர்க்கப்படும். நாயின் ரத்த வகை, உடல் நிலை, குணாதிசயம் போன்றவற்றை எளிதில் கண்டறிய முடியும். அதே இனத்தில் வேறு நாய்க்கு ரத்தம் தேவைப்படும்போது, சிப் பொருத்தப்பட்ட நாய்களிடம் இருந்து, அதன் உரிமையாளர்கள் அனுமதியுடன் ரத்தம் பெற முடி யும். இதற்காக நாய்களின் பட்டி யல், அவற்றின் மைக்ரோசிப் எண் ஆகியவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறோம். நாட்டு இன நாய்களின் ரத்த மாதிரி மூலம் அவற்றின் ரத்த உட்பிரிவுகளை கண்டறிந்து ரத்த தானத்துக்கு ஏற்ற நாய்களை தேர்வு செய்ய இயலும். மைக்ரோசிப் பொருத்தப்படுவதால் ஒருவருடைய நாய்களை மற்றவர் கள் திருட முடியாது. திருடினால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டது

கருத்துகள் இல்லை: